Reliable Software
www.garudabazaar.com

கார்த்திக் நரேனின் "நரகாசூரன்" பிரபல ஓடிடியில் வெளியாகிறதா? .. பின்னணி தகவல் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துருவங்கள் பதினாறு படத்துக்கு பிறகு இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய இரண்டாவது படம் நரகாசூரன்.

Karthick Narens Naragasooran finalised? Heres what we know!

ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த படம் பல ஆண்டுகளாக வெளியாகாமல் சிக்கிக்கொண்டது. அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஆத்மிகா, ஷ்ரேயா சரண், இந்திரஜித் சுகுமாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நரகாசூரன் ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் வகையறா திரைப்படம் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு சுஜித் சரங், எடிட்டிங் பணியை ஸ்ரீஜித் சரங் ஆகியோர் கவனிக்க,  ரோன் ஏதன் யோகன் இசையமைத்துள்ளார்.

நரகாசூரனுக்குப் பிறகு, கார்த்திக் நரேன் மாஃபியா திரைப்படத்தை இயக்கியிருந்தார். அருண் விஜய், பிரியா பவானி சங்கர், பிரசன்னா மற்றும் பலர் நடித்த மாஃபியா அத்தியாயம் 1 படத்திற்கு இசையை ஜேக்ஸ் பெஜாய் இசையமைத்தார், ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் பணிகளை முறையே கோகுல் பெனாய் மற்றும் ஸ்ரீஜித் சரங் ஆகியோர் கவனித்துக் கொண்டனர். அதிரடி ஆக்‌ஷன் க்ரைம் த்ரில்லர் படமான இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரித்தது.

இந்நிலையில் இப்போது, ​​நரகாசூரன் சோனி லைவில் திரையிடப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் எதிர்பார்க்கலாம் என்றும் படம் ஜூன் மாதத்தில் மேற்சொன்ன ஓடிடி தளத்தில் வெளிவர வாய்ப்புள்ளதாகவும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்ந்து கார்த்திக் நரேன், தனுஷின் 43வது படத்தை இயக்குகிறார். இப்படத்தில் தனுஷூடன் மாளவிகா மோகனன் நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இப்படத்துக்கு இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "அதிர்ச்சி!!".. பிரபல இளம் தொகுப்பாளினிக்கு வந்த 'வக்கிரமான மெசேஜ்கள்!'.. கணவர் வெளியிட்ட பகீர் தகவல்கள்!

Karthick Narens Naragasooran finalised? Heres what we know!

People looking for online information on Aathmika, Arvind Swami, Dhuruvangal Pathinaaru, Indrajith, Indrajith Sukumaran, Karthick Naren, Mafia, Naragasooran, Ron Ethan Yohaan, Shriya Saran, Sundeep Kishan will find this news story useful.