Jai been others
www.garudabazaar.com

போடு.. போடு.. “வீட்லயே 2 இயக்குநர்களை எதிர்பாக்கலாமா..?”.. சூர்யா Exclusive பேட்டி Video!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சூர்யா, ரெஜிஷா விஜயன் நடிப்பில், ஜோதிகா & சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ளது ஜெய் பீம் திரைப்படம்.

karthi and jyothika may direct movies suriya breaking interview

பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார்.  இந்த படம் வரும் நவம்பர் 2-ஆம் தேதி அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக நடித்துள்ளார் சூர்யா. இப்படத்தை த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். இந்நிலையில் பிஹைண்ட்வுட்ஸ் தளத்த்தில் பிரத்தியேகமாக பேட்டி அளித்திருக்கும் நடிகர் சூர்யா, “எப்போது திரைப்பட இயக்குனராக உங்களை பார்க்கலாம்?” என்று கேட்கப்பட்டபோது,  நடிகர் கார்த்தி மற்றும் ஜோதிகா எதிர்காலத்தில் திரைப்படம் இயக்கும் வாய்ப்புள்ளதாக பதில் அளித்துள்ளார்.

அதன்படி, “இயக்குனர் ஆவது பற்றி எனக்கு தெரியாது .. கார்த்தி கூட எதிர்காலத்தில் இயக்குனர் ஆகலாம்.. எப்போது பார்த்தாலும் நான் ஒரு கதை எழுதுகிறேன் .. இதுபற்றி ஆய்வு பண்ணுகிறேன் என்று சொல்லிக் கொண்டிருப்பான்.. கார்த்திக் இயக்குனர் ஆவதற்கு வாய்ப்பு உண்டு. அதேபோல் ஜோதிகா கூட நிறைய ஐடியா வைத்திருக்கிறார். அவர் இயக்குனர் ஆவதற்கு கூட வாய்ப்பு உள்ளது. சாத்தியம் இருக்கிறது. நான் நடிப்பதிலும் தயாரிப்பிலும் சந்தோஷமாக இருக்கிறேன்!” என்று சூர்யா கூறுகிறார்.

சூர்யா பேசி இருக்கும் முழு பேட்டியை இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம். 

போடு.. போடு.. “வீட்லயே 2 இயக்குநர்களை எதிர்பாக்கலாமா..?”.. சூர்யா EXCLUSIVE பேட்டி VIDEO! வீடியோ

karthi and jyothika may direct movies suriya breaking interview

People looking for online information on SuriyaJyothika JaiBhimJaiBhimOnPrime JaiBhimTrailerkarthi will find this news story useful.