Jai been others
www.garudabazaar.com

"ஜெய் பீம் படம் பார்த்து கண்கள் குளமானது" - உலக நாயகன் கமல்ஹாசன் நெகிழ்ச்சி டிவீட்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜெய் பீம்' திரைப்படம் ஒரே நேரத்தில் அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் இந்தத் தீபாவளி வெளியீடாக இன்று நவம்பர் 2 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் 240 நாடுகளில் பல்வேறு பகுதிகளிலும் ரிலீஸ் ஆகியுள்ளது.  

Kamal Haasan Appreciates Suriya's Jai Bhim Movie

ஜெய் பீம்' திரைப்படம் உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில்  தமிழகத்தில் 1995-ல் நடந்த சம்பவங்களைக் கொண்டு த.செ.ஞானவேல் கதையை உருவாக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், ராவ் ரமேஷ், ரஜிஷா விஜயன், மணிகண்டன், லிஜோ மோல் ஜோ ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Kamal Haasan Appreciates Suriya's Jai Bhim Movie

ஒடுக்கப்பட்டவர்களின் சமூக நீதிக்காகக் குரல் கொடுக்கும் வழக்கறிஞர் சந்துருவாக, நடித்துள்ளார் சூர்யா. படத்தினை ராஜசேகர் கற்பூரசுந்தரபாண்டியன் இணைந்து தயாரித்துள்ளார். ’ஜெய் பீம்’ திரைப்படத்திற்கு ஷான் ரால்டன் இசையமைத்துள்ளார். படத்திற்கு கேமரா எஸ்.ஆர்.கதிர், எடிட்டர் ஃபிலோமின்ராஜா. கலை இயக்குநராக கதிர் பணியாற்றியுள்ளார்.

Kamal Haasan Appreciates Suriya's Jai Bhim Movie

இந்நிலையில் இந்த படத்தை  இன்று பார்த்துவிட்டு நடிகர் கமல்ஹாசன் படக்குழுவை பாராட்டி டிவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் #JaiBhim பார்த்தேன்.கண்கள் குளமானது.பழங்குடியினரின் இன்னல்களை அழுத்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் @tjgnan பொதுச் சமூகத்தின் மனசாட்சிக்குக் குரலற்றவர்களின் குமுறல்களைக் கொண்டு சேர்த்த @Suriya_offl ஜோதிகா மற்றும் படக்குழுவினருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.என குறிப்பிட்டுள்ளார்.

Kamal Haasan Appreciates Suriya's Jai Bhim Movie

பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காக போராடும் வழ்க்கறிஞராக, முன்னாள் நீதியரசர் சந்துருவின் வாழ்க்கையில் நடந்த ஒரு சிறு பகுதியை எடுத்து இந்த திரைப்படம் உருவாகி உள்ளது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Kamal Haasan Appreciates Suriya's Jai Bhim Movie

People looking for online information on Jai Bhim, Kamal Haasan, Suriya will find this news story useful.