www.garudabazaar.com

மருத்துவமனையில் இருந்து ஃபோட்டோ பகிர்ந்த Jeremy Renner! நலம்பெற வாழ்த்திய தனுஷ் பட இயக்குநர்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மார்வெல் திரைப்படங்களில் ‘ஹாக் ஐ’ சூப்பர்ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து புகழ்பெற்றவர் ஹாலிவுட் நடிகர் ஜெரமி ரெனர்.

Jeremy Renner shares first picture from hospital

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை இவர், அவெஞ்சர்ஸ் மற்றும் கேப்டன் அமெரிக்கா படங்களில் நடித்ததற்காக பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே வெளியான ‘தி ஹர்ட் லாக்கர்’, 2011-ல் வெளியான ‘தி டவுன்’ ஆகிய படங்களில் நடித்த ஜெரமி ரெனர் ஆஸ்கார் விருதுக்கு இரண்டு முறை  பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.  இதனிடைடே ஜெரமியின் ‘மேயர் ஆஃப் கிங்ஸ்டவுன்’ 2வது சீசன், வரும் ஜனவரி 15 அன்று பாரமவுண்ட்+ ல் திரையிடப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் ஜெரமி ரெனரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படும் தகவல்கள் பலவும் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்கும் கவலைக்கும் உள்ளாக்கியுள்ளது. அதன்படி, தமது வீட்டிற்கு முன் குவிந்திருந்த பனியை சுத்தம் செய்து கொண்டிருந்ததாகவும், அப்போது எதிர்பாராத நிலையில உண்டான விபத்தால் அவர் அதில் சிக்கி காயம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது.

Avengers actor Jeremy Renner shared 1st photo from hospital

மேலும் ஜெரமி ரெனர், தற்போது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறப்பட்டு வந்த நிலையில், விரைவில் அவர் குணமடைய ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருவதாக இணையதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக ஜெரமி விபத்து ஏற்பட்டதும், பின்னர் விமானம் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அவரது குடும்பத்தினர் அவருடன் மருத்துவமனையில் இருப்பதாகவும், அவரது செய்தித் தொடர்பாளர் கூறியிருந்தார். 

Jeremy Renner shares first picture from hospital

இதனிடையே மருத்துவமனையில் இருந்து நடிகர் ஜெரமி ரெனர் தமது முதல் ஃபோட்டோவை பகிர்ந்துள்ளார். ஆம், விபத்துக்கு பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள  நடிகர் ஜெரமி ரெனர், மருத்துவமனை படுக்கையில் இருந்தபடி தான்  எடுத்த செல்ஃபியை ஷேர் செய்துள்ளர். இவருக்கு தனுஷ் நடித்த தி கிரே மேன் படத்தின் இயக்குநர்கள் Russo Brothers உட்பட பலரும் பூரண நலம்பெற வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Jeremy Renner shares first picture from hospital

People looking for online information on Avengers Jeremy Renner, அவெஞ்சர்ஸ் நடிகர், அவெஞ்சர்ஸ் நடிகர் ஜெரமி ரெனர், ஜெரமி ரெனர் will find this news story useful.