www.garudabazaar.com

வால்ட் டிஸ்னியின் Indiana Jones and the Dial of Destiny.. பட்டைய கிளப்பும் டிரெய்லர்.. ரிலீஸ் தேதி இதுதான்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இண்டியானா ஜோன்ஸ் அண்ட் டயல் ஆஃப் டெஸ்டினி படத்தின் ஆரவாரமான ட்ரெய்லர் காட்சி மற்றும் அதிகாரப்பூர்வ போஸ்டர் வரவேற்பை பெற்று வருகிறது.

Indiana Jones and the Dial of Destiny Trailer june 30th release

புகழ்பெற்ற ஹீரோ ஹாரிசன் ஃபோர்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளராக நடித்து ஜேம்ஸ் மங்கோல்ட் ("ஃபோர்டு வி ஃபெராரி," "லோகன்") இயக்கத்தில் உருவான மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட, லூகாஸ் ஃபில்ம்ஸ்ஸின் "இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டயல் ஆஃப் டெஸ்டினி"யின் ஐகானிக் "இண்டியானா ஜோன்ஸ்" உரிமையின் ஐந்தாவது பார்ட்டின் போஸ்டர் மற்றும் டிரெய்லரை வால்ட் டிஸ்னி நிறுவனம் வெளியிட்டது.

இந்தத் திரைப்படம், திரையரங்குகளில் ஜூன் 30, 2023 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும், தெலுங்கு ஆகியமொழிகளில்,வெளியாகிறது.  இதில் ஃபோர்டுடன் இணைந்து இந்தத் திரைப்படத்தில் நடிப்பவர்களில்  ஃபோப் வாலர்-பிரிட்ஜ் (“ஃப்ளீபேக்”), அன்டோனியோ பண்டெராஸ் (“பெயின் அண்ட் க்ளோரி), ஜான் ரைஸ்-டேவிஸ் (“ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்”), ஷானெட் ரெனி வில்சன் (“பிளாக் பாந்தர்”), தாமஸ். கிரெட்ச்மேன் (“தாஸ் பூட்”), டோபி ஜோன்ஸ் (“ஜுராசிக் வேர்ல்ட்: ஃபால்லன் கிங்டம்”), பாய்ட் ஹோல்ப்ரூக் (“லோகன்”), ஆலிவர் ரிக்டர்ஸ் (“ப்ளாக் விடோ”), ஈதன் இசிடோர் (“மார்டெல்”) மற்றும் மேட்ஸ் மிக்கெல்சன் (“ஃபெண்டாஸ்டிக் பீஸ்ட்ஸ்: தி சீக்ரெட்ஸ் ஆஃப்டம்பில்டோர்"). ஆகியோர் அடங்குவர்.

ஜேம்ஸ் மான்கோல்ட் இயக்கிய இப்படத்தை கேத்லீன் கென்னடி, ஃபிராங்க் மார்ஷல் மற்றும் சைமன் இமானுவேல் ஆகியோர் தயாரித்துள்ளனர், மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் மற்றும் ஜார்ஜ் லூகாஸ் ஆகியோர் நிர்வாக தயாரிப்பாளர்களாக பங்காற்றியுள்ளனர். 1981-ல் முதல் முதலான அசல் "ரைடர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்"  திரைப்படம் தொடங்கி  இண்டியின் ஒவ்வொரு பகுதிக்கும் இசைவடிவம் கொடுத்த புகழ்பெற்ற இசை அமைப்பாளர் ஜான் வில்லியம்ஸ் இதில் மீண்டும் இசையமைத்திருக்கிறார்.

மேலும் செய்திகள்

Indiana Jones and the Dial of Destiny Trailer june 30th release

People looking for online information on Indiana Jones, Indiana Jones and the Dial of Destiny will find this news story useful.