Beast Others
www.garudabazaar.com

”எல்லோமே மாறும்”… ஐஸ்வர்யாவுக்கு அட்வைஸ்... இளையராஜா பகிர்ந்த பாடல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளையராஜாவுடனான சந்திப்புக் குறித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

Ilaiyaraaja super advice to aishwarya Rajinikanth

விவாகரத்தும் திரைவாழ்க்கையும்….

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் 18 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் தனுஷை மணந்தார். அவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் உள்ளனர். இதையடுத்து சமீபத்தில் அவர்கள் திருமன வாழ்வில் இருந்து பிரிவதாக அறிவித்தது பரபரபாக பேசப்பட்டது. இல்லற வாழ்க்கையினூடே ஐஸ்வர்யா திரைப்பட இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். தனுஷ் நடிப்பில் ‘3’ என்ற படத்தையும் கௌதம் கார்த்திக் நடிப்பில் ’வை ராஜா வை ‘ என்ற படத்தையும் இயக்கியுள்ளார். விவாகரத்து அறிவிப்புக்கு பின் ஐஸ்வயா மீண்டும் சினிமா பணிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இதையடுத்து அவர் பல மொழிகளில் இயக்கிய பயணி (முசாஃபிர்) என்ற ஆல்பம் கவனத்தைப் பெற்றது. அதையடுத்து அவர் இப்போது ‘ஓ சாத்தி லால்’ என்ற பாலிவுட் படத்தை இயக்க உள்ளார்.

Ilaiyaraaja super advice to aishwarya Rajinikanth

இளையாராஜா சந்திப்பு…

இந்நிலையில் சமீபத்தில் அவர் இசைஞானி இளையராஜாவோடு இருக்கும் புகைப்படங்களை தற்போது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இளையராஜா ஆர்மோனியத்தில் வாசிப்பது போலவும் , ஐஸ்வர்யா ரஜினிகாந்த அதை மகிழ்ச்சியோடு கேட்பது போலவும் உள்ளது. மேலும் அந்த புகைப்படங்களோடு ”என்னுடைய திங்கள் கிழமை நண்பகல் இதைவிட மேஜிக்கலாகவும் ம்யூசிக்கலாகவும் இருக்க முடியாது. இளையராஜா அங்கிளோடு நேரத்தை செலவிடுவது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. Work mode on” எனக் கூறியுள்ளார். இதனால் இருவரும் இணைந்து ஏதேனும் ஒரு படத்தில் பணிபுரிய போகிறார்களா என்ற சந்தேகம் ரசிகர்களிக்கு எழுந்துள்ளது.

Ilaiyaraaja super advice to aishwarya Rajinikanth

எல்லாம் மாறும் அன்பு மாறாது….

இந்நிலையில் ஐஸ்வர்யாவின் பதிவைப் பகிர்ந்துள்ள இளையராஜா அதில் ”உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நிறைய விஷயங்கள் நம் வாழ்க்கையில் நடக்கலாம். ஆனால் ஒரு விஷயம் எப்போதும் மாறாது – என் உண்மையான அன்பு. கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும். மகிழ்ச்சியாக இருங்கள்.

அனைத்தும் கண்டிப்பாக மாறும். ஆனால் ஒரு விஷயம் மற்றும் நிலைத்து நிற்கும் – உண்மையான அன்பு.” எனக் கூறியுள்ளார். மேலும் அவரின் டிவீட்டோடு ‘everything must change’ என்ற பாடலைப் பகிர்ந்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja super advice to aishwarya Rajinikanth

People looking for online information on Aishwarya Rajinikanth, Ilaiyaraaja, Meeting, Tweet will find this news story useful.