Annatha Others ua
www.garudabazaar.com

"ஒத்துமையா இருந்தாங்களே".. ஒரு பாட்டில் பாலிற்காக அடிச்சுக்கும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்! #BiggBossTamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் சீசன் 5 தற்போது சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன், விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

housemates fighting for milk biggbosstamil5 new task

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியில் முன்னதாக காயின் டாஸ்க் பிக்பாஸ் போட்டியாளர்களிடையே மிகப்பெரிய போரினை உண்டு பண்ணியது எனறால், தற்போது கொடுக்கப்பட்டிருக்கும் புதிய டாஸ்க் போட்டியாளர்களிடையே மிகப்பெரிய கலவரத்தையும் களேபரத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது எனலாம்.

housemates fighting for milk biggbosstamil5 new task

பிக்பாஸ் வீட்டுக்குள் கொடுக்கப்படும் டாஸ்குகளின்போதுதான், போட்டியாளர்களின் எமோஷன் வெளியே வரும் என்பது நிதர்சனம். அதை மேலும் நிஜமாக்கும் வகையில் தற்போது பிக்பாஸ் போட்டியாளர்கள் அணிகளாக பிரிக்கப்பட்டு, பாலை சேகரிக்க கூடிய ஒரு டாஸ்க் வைக்கப்பட்டது. இதில் ஒவ்வொருவரும் ஓடிச்சென்று பாலை பாட்டில் பாட்டிலாக சேகரித்து வந்து தங்கள் கேனில் நிரப்பிக்கொள்ள வேண்டும்.

housemates fighting for milk biggbosstamil5 new task

இதில் பாலை நிரப்பிக் கொண்டு வரும்பொழுது யார் வேண்டுமானாலும் தடுக்கிறார்கள் யார் வேண்டுமானாலும் விடுகிறார்கள் இதையெல்லாம் தாண்டி யார் பாலை எடுத்துவந்து தங்களுடைய கேனில் நிரப்புகிறார்கள் என்பது போல் இந்த டாஸ்க் தெரிகிறது.

housemates fighting for milk biggbosstamil5 new task

அதேசமயம் இடித்துக் கொண்டும், அடித்துக்கொண்டும் ஓடி அங்கிருக்கும் பொருட்களை உடைத்து போட்டியாளர்கள் ஆக்ரோஷமாக இந்த டாஸ்க்குகளை விளையாடுவதை காண முடிகிறது.

housemates fighting for milk biggbosstamil5 new task

இதனைத்தொடர்ந்து அக்‌ஷரா, பிரியங்கா மற்றும் தாமரை வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர். இதேபோல் தாமரை மற்றும் பாவனி வாக்குவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

housemates fighting for milk biggbosstamil5 new task

சிபி டென்ஷனாகி அங்கிருக்கும் பொருட்களை அடித்து நொறுக்குகிறார். தூக்கி தூக்கி வீசுகிறார். இந்த காட்சிகளை பார்ப்பதற்கு நடுக்கமாக இருக்கிறது என்று பலரும் பேசி வருகின்றனர். இவை தொடர்பான புரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி இருக்கின்றன.

housemates fighting for milk biggbosstamil5 new task

People looking for online information on Akshara, Biggboss, Biggboss milk collecting task, Biggbosstamil, BiggBossTamil5, BiggBossTamil5 Task, Ciby, Imman, Pavani, Thamarai will find this news story useful.