www.garudabazaar.com

"செம்ம மாஸ்"...ஹிப்ஹாப் தமிழாவின் அடுத்த படம்!.. பட்டைய கிளப்பும் நியூ அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனியிசைக் கலைஞராக பயணித்து வந்த ஆதி, ஹிப்ஹாப் தமிழாவாக சினிமவிற்குள் அறிமுகமானார். 'மீசைய முறுக்கு', திரைப்படத்தின் மூலம் நடிகராக மட்டுமல்லாமல் இயக்குநராகவும் அறிமுகமாகி வியக்க வைத்தார். 

Hiphop tamila in sivakumarin sapatham movie new update

ஆத்மிகா, விவேக், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், விஜயலட்சுமி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இவரது நடிப்பில் 'நட்பே துணை', 'நான் சிரித்தால்' ஆகிய படங்கள் வெளியாகி இளைய தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் வகையில் அமைந்தது.  தற்போது முதல் படத்தைப் போலவே இயக்கி நடிக்க களமிறங்கியுள்ளார் ஹிப்ஹாப் தமிழா. சத்யஜோதி நிறுவனம் வழங்க முதல் பிரதி அடிப்படையில் தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார்.

Hiphop tamila in sivakumarin sapatham movie new update

தனது புதிய படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் ஹிப்ஹாப் தமிழா, இப்படத்திற்கு 'சிவகுமாரின் சபதம்' என பெயரிட்டுள்ளர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. ஒளிப்பதிவாளராக அர்ஜுன்ராஜா, எடிட்டராக தீபக், கலை இயக்குநராக வாசுதேவன் ஆகியோர் பணிபுரிந்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.

Hiphop tamila in sivakumarin sapatham movie new update

இந்நிலையில் தற்போது இப்படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகி வைரலாகி வருகிறது. இப்படத்தின் பாடல்களுக்கான உரிமத்தை 'திங்க் மியூசிக்', நிறுவனம் பெற்றுள்ளதாகவும் விரைவில் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாக இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

Hiphop tamila in sivakumarin sapatham movie new update

People looking for online information on Hip Hop Tamizha Adhi, Sivakumarin sapatham will find this news story useful.