www.garudabazaar.com

மாயக்கண்ணனாக நடிகர் சந்தானம்! இதமான சபாபதி படத்தின் First Single பாடல் எப்படி இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சந்தானம் நடிப்பில் காமெடி-குடும்ப சென்டிமென்ட் கலந்து உருவாகியுள்ள படம் ‘சபாபதி’.

Here is the beautiful first single from Sabhaapathy movie

இந்த  திரைப்படத்தை ஆர் கே என்டர்டெயின்மென்ட் சார்பில் சி ரமேஷ் குமார் தயாரிக்க, ஆர் ஸ்ரீநிவாச ராவ் இயக்கியுள்ளார். திக்கு வாயால் அவதிப்படும் வாலிபர் கதாபாத்திரத்தில் முதல் முறையாக இப்படத்தில் சந்தானம் நடித்துள்ளார். சாம் சி எஸ் இசையில் உருவாகியுள்ள  ‘சபாபதி’-யின் சண்டைக் காட்சிகளை ஹரி தினேஷ் வடிவமைத்துள்ளார்.

Here is the beautiful first single from Sabhaapathy movie

நகைச்சுவை படமாக உருவாகும் இந்த திரைப்படத்தில் தந்தை-மகனுக்கிடையேயான உறவு பிரதானமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் நவம்பர் மாதம் வெளியாகவுள்ள இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை கலர்ஸ் டிவி வாங்கியுள்ளது.

Here is the beautiful first single from Sabhaapathy movie

எம் எஸ் பாஸ்கர், பிரீதி வர்மா, சாயாஜி ஷிண்டே, ‘விஜய் டிவி’ புகழ், சுவாமிநாதன், ‘காமெடி பஜார்’ மாறன் உள்ளிட்டோர் ‘சபாபதி’ படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஒளிப்பதிவை பாஸ்கர் ஆறுமுகம் கவனிக்க, படத்தொகுப்பை லியோ ஜான் பால் கையாண்டுள்ளார்.

Here is the beautiful first single from Sabhaapathy movie

இந்நிலையில் சாம் சி எஸ் இசையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் 'மயக்காதே மாயக்கண்ணா நீ' பாடல் வெளிவந்துள்ளது. விவேக் பாடல் வரிகளை எழுத, ஸ்ரீனிஷா ஜெயசீலன் பாடியுள்ளார். நவராத்திரியை முன்னிட்டு நவராத்திரி பாடலாக இந்த பாடல் வெளியாகியுள்ளது.

மாயக்கண்ணனாக நடிகர் சந்தானம்! இதமான சபாபதி படத்தின் FIRST SINGLE பாடல் எப்படி இருக்கு! வீடியோ

Tags : Santhanam

தொடர்புடைய இணைப்புகள்

Here is the beautiful first single from Sabhaapathy movie

People looking for online information on Santhanam will find this news story useful.