இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம்.. இணையத்தில் தேடும் ரசிகர்கள்!!
முகப்பு > சினிமா செய்திகள்சினிமா விருதுகளில் உலகளவில் உயரிய விருதாக பார்க்கப்படும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
![gujarati film chhello show is india entry for 2023 oscars gujarati film chhello show is india entry for 2023 oscars](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/gujarati-film-chhello-show-is-india-entry-for-2023-oscars-photos-pictures-stills.jpg)
அந்த விழாவில் சிறந்த அந்நிய மொழி திரைப்படத்திற்கான பிரிவில் ஒவ்வொரு நாட்டின் சார்பிலும் திரைப்படங்கள் அனுப்பப்படுவது என்பது வழக்கமான ஒன்று தான்.
அந்த வகையில், இந்தியாவின் சார்பில் 2023 ஆம் ஆண்டு ஆஸ்கார் விருதுக்காக குஜராத்தி படமான 'செலோ சோ' (Chhello Show (அல்லது) Last Film Show) என்ற படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது அதிகார்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பான் நளின் இயக்கி உள்ள இந்த திரைப்படத்தில் பாவின் ரபாரி, பவேஷ் ஸ்ரீமாலி, ரிச்சா மீனா, திபென் ராவல், பரேஷ் மேத்தா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தியாவில் உள்ள ஒரு தொலைதூர கிராமத்தில் வசிக்கும் 9 வயது சிறுவனுக்கு சினிமா மீதுள்ள காதலைச் சுற்றி நகரும் திரைப்படம் தான் இது என படத்தின் ட்ரெயிலர் மூலம் தெரிய வருகிறது.
ஆஸ்கார் விருதுக்கு தான் இயக்கிய படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது பற்றி பேசிய இயக்குனர் பான் நளின், "இப்படி ஒரு நாள் வரும் என நினைத்து பார்க்கவே இல்லை. உலக அளவில் செலோ சோ படத்திற்கு பலரும் அன்பை வெளிப்படுத்தினார்கள். ஆனால், இந்தியாவில் எப்படி இதனை கவனிப்பார்கள் என்ற கவலை இருந்தது. ஆனால், தற்போது அந்த கவலை மாறி விட்டது" என குறிப்பிட்டு படத்தை பரிந்துரை செய்தவர்களுக்கு தனது நன்றிகளையும் பான் நளின் தெரிவித்துள்ளார்.
குஜராத்தி படமான செலோ சோ, அக்டோபர் 14 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, Tribeca திரைப்பட விழாவில் இந்த திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. அதே போல, 66 ஆவது Valladolid சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்த திரைப்படம் விருது வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | "சார் ஷோபனா சார்".. குழந்தை நட்சத்திரமாக அசத்தும் நித்யா மேனன்.. வைரல் Throwback Video!!