Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

கோபிநாத்துக்கு இவ்வளவு பெரிய மகள் இருக்கிறாரா... விருது மேடையில் நெகிழ்ச்சி மொமண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

Gopinath at Behindwoods Gold Icon விருது விடையில் கோபிநாத் தனது மகளுடன்

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா தொடரின் தொகுப்பாளர் கோபிநாத்துக்கு அறிமுகம் என்பதை தேவையில்லை. 90ஸ் மட்டுமல்ல 2k கிட்ஸ்களுக்கும் பேவரைட் நிகழ்ச்சியாக இருக்கிறது நீயா நானா. அதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார் தொகுப்பாளர் கோபிநாத். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தான் அவரது சொந்த ஊர். ஆரம்பத்தில் ரேடியோ ஜாக்கியாக பணியாற்றியவர், பின்பு தனது திறமையை நிரூபிக்க பல வழித்தடங்களை தேடினார். பின்பு ஒரு வழியாக விஜய் டிவி வந்தடைந்தார். தெளிவான சிந்தனையும், கூர்மையான வார்த்தைகளும் தான் இவரது பெரிய பிளஸ். இந்நிலையில் Behindwoods சார்பாக கோபிநாத் அவர்களுக்கு "தொலைக்காட்சித் துறையில் கோல்டன் ஐகான்' என்ற விருதினை வழங்குவதில் மகிழ்ச்சி கொள்கின்றோம். 

இந்நிலையில் இந்த விருது வழங்கும் விழாவிற்கு அவரது மகள் வெண்பாவை Behindwoods நிறுவனம் சர்ப்ரைஸாக அழைத்திருந்தது. இந்நிலையில் மேடையில் தனது மகளை பார்த்த கோபிநாத்க்கு இன்ப அதிர்ச்சி. மேலும் தனது மகளின் கையால் விருது வாங்கிய போது கோபிநாத் நெகிழ்ச்சியில் ஆழ்ந்து போனார். குழந்தையின் நெற்றியில் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த தருணங்கள் பார்ப்போருக்கும் அந்த நெகிழ்ச்சியை அளித்து விட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. விருது பெற்ற கோபிநாத் அவர்களுக்கு Behindwoods சார்பாக வாழ்த்துக்கள்..!

Gopinath at Behindwoods Gold Icon விருது விடையில் கோபிநாத் தனது மகளுடன்

Gopinath at Behindwoods Gold Icon விருது விடையில் கோபிநாத் தனது மகளுடன்

People looking for online information on BehindwoodsGoldIcon will find this news story useful.