பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேபி வெளியிட்ட முதல் பதிவு..."ஆம் எனக்கு பாலாவை பிடிக்கும்"
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் போட்டியாளர்கள் நூறு நாட்களுக்கு மேல் கடந்து தங்களது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளனர். இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனல்ஸ் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒவ்வொரு முறையும் பிக்பாஸின் கடைசி வாரத்தில் வெளியேறிய போட்டியாளர்கள் இறுதி போட்டியாளர்களை சந்திப்பது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் ரேகா, அர்ச்சனா, ரமேஷ், அனிதா, சனம், வேல்முருகன் போன்ற போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர்.
ஒவ்வொரு சீசனின் கடைசியிலும் ஒரு அதிரடி திருப்பத்தை போட்டியாளர்கள் முன் வைப்பது பிக்பாஸின் வழக்கம். அதாவது தனக்கு முதல் இடம் கிடைக்காது என்று நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் தொகையை பெற்றுக்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்பதாகவே வீடு திரும்பலாம். கடந்த சீசனில் கவின் அப்படி சமயோஜிதமாக யோசித்து அந்த ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த சீசனில் யார் அப்படி வெளியேறுவார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் கேபி 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது கேபி அந்த பெட்டியை எடுக்க ரியோ தடுக்கிறார். அதற்கு கேபி "எனக்கு அம்மா மட்டும் தானடா" என்று கூறுகிறார். இந்நிலையில் இந்த நெகிழ்ச்சியான வார்த்தைகளை ரசிகர்கள் டிவிட்டரில் டிரெண்ட் செய்தனர். தற்போது கேபி இந்த அளவில் டிரெண்டில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கேபி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின் முதல் முறையாக ரசிகர்கள் முன்பு லைவ் வந்துள்ளார். அப்பொழுது ரசிகர்களுக்கு மனமுருகி நன்றி செலுத்தினார். அப்போது ரசிகர் ஒருவர் "உங்களுக்கு பாலாவை பிடிக்குமா' என்று கேட்டதற்கு, "நிச்சயமாக எனக்கு பாலாவை பிடிக்கும். நீங்கள் கொடுத்த அன்பை மனதில் வைத்து நான் மென்மேலும் முன்னேறுவேன். பிக்பாஸ் வீட்டில் மிகவும் மிஸ் செய்கிறேன்" என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கேபி வெளியிட்ட முதல் பதிவு..."ஆம் எனக்கு பாலாவை பிடிக்கும்" வீடியோ