எப்படி 'ஸ்கெட்ச்' போட்டாலும் சிக்க மாட்டேன்... பாராட்டும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் வீட்டில் மீண்டும் சோம்பேறி டாபிக்கை பாலாஜி ஆரம்பித்தார். இருவரும் பேசிக்கொண்டு இருந்தபோது அருகில் கேப்ரியலா, ஷிவானி, சோம் ஆகியோர் நின்று கொண்டு இருந்தனர். அப்போது ஒரு கட்டத்தில் இப்படிதான் கேபி ஹவுஸ் கீப்பிங் வர மாட்டாங்கன்னு சொன்னீங்க. அவங்க எப்ப பார்த்தாலும் கிச்சன் டீம் போறதா சொன்னீங்க என பாலாஜி கூறினார்.

Gabriella given a befitting reply for Balaji's accusation

பக்கத்தில் நின்றிருந்த கேபியிடமும், பாலாஜி இதைச்சொல்லி நியாயம் கேட்க, அதை எதுக்கு என்கிட்ட கேக்குற? என நெற்றியில் அடித்தது போல கேபி திருப்பி கேட்டார். இதனால் ஆரிக்கு எதிராக கேபியை திசைதிருப்ப முயன்ற பாலாஜியின் யுக்தி பலிக்கவில்லை. இதையடுத்து ஷிவானி பத்தி ஏன் அப்படி பேசுனீங்க? என கேட்டு டாபிக்கை மாற்றி விட்டார். உங்க பொண்ணா இருந்தா அப்டித்தான் பேசுவீங்களா? என பாலாஜி கேட்க. அதற்கு ஆரி பதில் அளித்தார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் கேபியின் புத்திசாலித்தனத்தை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதேபோல சரியான காரணங்களை சொல்லி அவர் ரம்யா, பாலாஜியை நாமினேட் செய்ததும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Gabriella given a befitting reply for Balaji's accusation

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.