www.garudabazaar.com

முதல் முறையாக தனுசுடன் ஜோடி சேரும் தமிழின் முன்னணி கதாநாயகி யார் தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பன்முக திறமை மிகுந்த நடிகர் தனுஷுக்கு கடைசியாக மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்' திரைப்படம்  திரையரங்கில் வெளியானது. கர்ணன் வெற்றிக்குப் பிறகு, நடிகர் தனுஷ் கடைசியாக OTT இயங்குதளமான Netflix இல் வெளியான 'ஜெகமே தந்திரம்' என்ற படத்தில் நடித்திருந்தார்.

first time actor dhanush joined with this heroine

நடிகர் தனுஷ் தற்போது கார்த்திக் நரேன் இயக்கும் 'மாறன்' படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார். சத்ய ஜோதி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. சமீபத்தில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியானது. இந்த படத்தில் பத்திரிக்கை நிருபராக தனுஷ் நடிக்கிறார்.

first time actor dhanush joined with this heroine

இதன் பிறகு, தனுஷ் தனது 44 வது படமாக சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கான கதை, திரைக்கதை மற்றும் வசனங்களை தனுஷே எழுதியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். 

first time actor dhanush joined with this heroine

இன்று (08.04.2021) இந்த படத்தின் புதிய அப்டேட்டாக இயக்குனர் இமயம் பாரதிராஜாவும், நடிகர் பிரகாஷ் ராஜும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

first time actor dhanush joined with this heroine

பின்னர் சற்று முன் தனுசுக்கு ஜோடியாக நித்யா மேனனும், ராஷி கண்ணாவும் நடிக்கின்றனர் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. அதனைத்தொடர்ந்து படத்தின் அடுத்த அறிவிப்பும் வெளியாகி உள்ளது.

first time actor dhanush joined with this heroine

இந்த படத்தில் முதல் முறையாக தனுசுக்கு ஜோடியாக ராஷி கண்ணா, நித்யாமேனனுடன் தற்போது பிரியா பவானி சங்கரும் நடிப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

first time actor dhanush joined with this heroine

பிரியா பவானி சங்கர் தற்போது 'ஓ மணப்பெண்ணே', அருண் விஜய் - ஹரி திரைப்படங்களில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

first time actor dhanush joined with this heroine

People looking for online information on D44, Dhanush, Nithya Menon, Priya Bhavani Shankar, Raashi Khanna will find this news story useful.