விக்ரம் - சூர்யா படங்களில் கலக்கிய குணச்சித்திர நடிகர் காலமானார். - திரைத்துறையினர் இரங்கல்.
முகப்பு > சினிமா செய்திகள்விக்ரம் - சூர்யா உள்ளிட்டோரின் படங்களில் நடித்த துரைப்பாண்டியன் காலமானார் என தெரிய வந்துள்ளது.

விக்ரம் நடித்த ஜெமினி, சூர்யாவின் மௌனம் பேசியதே, மாதவன் நடித்த ரன் உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்தவர் துரைப்பாண்டியன். வழக்கறிஞரான இவர் திரைப்பட நடிப்பிலும் ஆர்வம் காட்டி வந்தார். மேலும் இவர் அதிமுகவிலும் பிரமுகராக நீடித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று மதியம் 1 மணி அளவில் துரைப்பாண்டியன் காலமாகியிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. நுரையீரல் பிரச்சனையில் பாதிகப்பட்டிருந்த துரைப்பாண்டியனின், உடல்நிலை மோசமடைய, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து சிகிச்சை பலனின்றி அவர் இயற்கை எய்தியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துரைப்பாண்டியனின் மறைவுக்கு திரைத்துறையினர் மற்றும் அதிமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.