Reliable Software
www.garudabazaar.com

அதிர்ச்சியில் திரையுலகம்!! பாடகரான பிரபல தமிழ் பட நடிகர் மரணம்! இந்த பாடலை மறக்க முடியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அண்மைக் காலமாக தமிழகத்தில் தொடர்ந்து தமிழகத்தில் திரைத்துறையினர் மரணமடையும் செய்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.

ennadi muniyama song fame actor and folk singer passes away

இந்திய அளவில் மிகப் பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்திய சுஷாந்த் சிங் ராஜ்புத் மறைவைத் தொடர்ந்து, கொரோனா காலத்தில், சின்னத்திரை நடிகை சித்ராவின் மறைவு, நடிகர் விசுவின் மறைவு என அடுத்தடுத்து பாடகர் எஸ்.பி.பி மறைவு வரை திரைத்துறையின் சோகம் உச்சத்தை தொட்டது.

இதனைத் தொடர்ந்து கவனிக்கத்தக்க இயக்குநரான எஸ்.பி.ஜனநாதன் மறைந்த செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் நகைச்சுவை நடிகர் விவேக் மரணம் அடைந்தார். இயக்குநர் தாமிரா மற்றும் அண்மையில் மறைந்த இயக்குநர் கே.வி.ஆனந்த் உள்ளிட்டோரின் மரணம் இன்னும் அனைவரையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தியது.

ennadi muniyama song fame actor and folk singer passes away

இந்நிலையில் 87 வயதான திரைப்பட நடிகரும் நாட்டுப்புற மற்றும் தெம்மாங்கு பாடகருமான டி.கே.எஸ் நடராஜன் உயிரிழந்திருக்கிறார். இவர் மிகவும் பிரபலமான பல  பழைய கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காட்சிகளில் நகைச்சுவை கதாபாத்திரமாக உடன் நடித்தவர். மற்றும் ஏத்தம் இறைக்கையிலே உள்ளிட்ட பல நாட்டுப்புற ஹிட் பாடல்களை படத்துக்காகவும் தனி பாடலாகவும் பாடியுளார். 

ennadi muniyama song fame actor and folk singer passes away

இவர் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ்பெற்றவரான சுஜா வருணி நடித்த பிரபல பாடல் ஒன்றில் நடித்திருக்கிறார். அர்ஜுன் ஹீரோவாக நடித்த படத்தில் வரும், ‘என்னடி முனியம்மா உன் கண்ணுல மை’ என்கிற ரீமிக்ஸ் பாடலில் அந்த பாடலை பாடுவது போல் பாடி நடித்திருப்பார். அவர் தான் டி.கே.எஸ்.நடராஜன். 60,70களில் எம்.ஜி.ஆர் படங்களில் இருந்து இதுவரை, 500க்கும் மேற்பட்ட திரைப்படங்களை நடித்தவர்.

அதுமட்டுமல்லாமல், படங்களில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு டப்பிங் குரல் கொடுக்கும் டப்பிங் யூனியன் ஆரம்பிப்பதற்கு முன்பாக, நாடகங்களில் நடித்துக் கொண்டே சினிமாவுக்கு டப்பிங் கொடுக்கும் வேலையெய் செய்து வந்த இவர்,  யூனியன் இல்லாததால், மற்ற ஆர்ட்டிஸ்ட்டுக்கு டப்பிங் பேச தனக்கு தெரிந்த நாடக நடிகர் நடிகைகளை தேடிப் பிடித்து.. அவர்களை டைரக்டர்களுக்கு அறிமுக படுத்தி டப்பிங் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளார்.

அப்படியே நாடக நடிகைகள் பலருக்கும் நிறைய வாய்ப்பு வாங்கி கொடுத்து தானும் நடிகராக வலம் வந்துள்ளார். “கற்பகம்” படத்தில் கே.ஆர்.விஜயாவை அறிமுகப் படுத்திய பிரபல டைரக்டர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் ஆஸ்தான நடிகராக இருந்துள்ளார். நிறைய எம்.ஜி.ஆர் படங்களிலும் நாகேஷ் படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.இவர் தற்போது மரணம் அடைந்திருக்கிறார். இவருக்கு திரைப்பட நடிகர்கள் சங்கம் இரங்கலை தெரிவித்துள்ளது.

இதேபோல் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமியின் மறைவும் பலரிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. டிராபிக் ராமசாமிக்கும் வயது 87 தான். அவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி, எஸ்.ஏ.சந்திரசேகர் டிராபிக் ராமசாமி என்கிற பெயரில் திரைப்படம் ஒன்றை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "நீதிக்காக அயராது போராடியவர்!".. டிராபிக் ராமசாமி மறைவு குறித்து கமல்ஹாசன் உருக்கம்!

ennadi muniyama song fame actor and folk singer passes away

People looking for online information on EnnadiMuniyamma, RIPTKSNatarajan, TKSNatarajan will find this news story useful.