பப்ஜி படத்தில் இணையும் 'எங்க வீட்டு மாப்பிள்ளை’ பிரபலம்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 10, 2019 03:33 PM
கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசனை வைத்து ‘தாதா 87’ படத்தை இயக்கியவர் விஜய் ஸ்ரீ ஜி. இவர் தனது அடுத்த படமாக ‘பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (பப்ஜி) படத்தை இயக்கி வருகிறார்.

இதில் நடிகர் விக்ரம்மின் உறவினரான அர்ஜுமன் நாயகனாக நடிக்கிறார். சின்னத்திரையில் ’எங்க வீட்டு மாப்பிள்ளை’ ஷோ மூலம் பிரபலம் அடைந்த சீதா லக்ஷ்மி இதில் முக்கிய வேட த்தில் நடிக்கிறார்.
பப்ஜி விளையாட்டை மையப்படுத்திய சஸ்பன்ஸ் திரில்லராக உருவாகும் இப்படத்தில் சீதா லக்ஷ்மி ஒரு தைரியம் நிறைந்த பெண்ணாக நடிக்கிறார். இவருடன் பிக் பாஸ் புகழ் ஜூலியும் ஒரு முக்கிய வேடத்தில் வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் திருச்சியில் முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கோவாவில் நடைபெற உள்ளது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என இயக்குநர் விஜய் ஸ்ரீ ஜி தெரிவித்துள்ளார்.