www.garudabazaar.com

பொன்னியின் செல்வனுக்காக 2017-லயே களமிறங்கிய மணிரத்னம்.. DOP ரவிவர்மன் பகிர்ந்த வைரல் ஃபோட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர்  மணி ரத்னம் பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார்.

DOP Ravi Varman ISC Shared Ponniyin Selvan Maniratnam BTS

Also Read | ONAM: கேரள ஸ்டைலில் உதயநிதி & வடிவேலுக்கு விருந்து வைத்த கீர்த்தி சுரேஷ்.. வைரல் ஃபோட்டோஸ்

முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் கடந்த செப்டம்பர் மாதம் 6 ஆம் தேதி வெளியானது.  நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது.

DOP Ravi Varman ISC Shared Ponniyin Selvan Maniratnam BTS

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின், ஷோபிதா துலிபாலா ஆகியோர் நடிக்கிறார்கள்.

DOP Ravi Varman ISC Shared Ponniyin Selvan Maniratnam BTS

ஆதித்த கரிகாலனாக விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண் மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். 

இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

DOP Ravi Varman ISC Shared Ponniyin Selvan Maniratnam BTS

இந்நிலையில் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ISC தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2017 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மணிரத்னம் புகைப்படத்தை பகிர்ந்து, "பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்யும் போது" என தலைப்பிட்டு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு 2019 ஆம் ஆண்டு துவங்கினாலும் பூர்வாங்க பணிகள் சில வருடங்களுக்கு முன்பு துவங்கியது குறிப்பிடத்தக்கது.

DOP Ravi Varman ISC Shared Ponniyin Selvan Maniratnam BTS

முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு பணிகள் நடந்து வருகிறது.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ravi Varman (@r_varman_)

Also Read | குடும்பத்துடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய மாளவிகா மோகனன்.. கூட யாரெல்லாம் இருக்கா?

தொடர்புடைய இணைப்புகள்

DOP Ravi Varman ISC Shared Ponniyin Selvan Maniratnam BTS

People looking for online information on Jayam Ravi, Karthi, Maniratnam, Ponniyin Selvan part 1, Ravi Varman, Vikram will find this news story useful.