மார்வெல்னா சும்மாவா? ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டிய Doctor Strange in the Multiverse of Madness!
முகப்பு > சினிமா செய்திகள்இன்னும் 8 நாட்களில் வெளியாக காத்திருக்கும் “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” இந்தியாவில் பிளாக்பஸ்டர் பாக்ஸ்ஆபிஸ் கலெக்ஷனை பெறபோகிறது, வெளியீட்டிற்கு முன்னரே 10 கோடி வரை வசூலித்து சாதனை படைத்துள்ளது.

Also Read | சாணிக் காயிதம் செல்வராகவனுக்கு கீர்த்தி சுரேஷ் தங்கச்சியா? இயக்குனர் சொன்ன சூப்பர் தகவல்
இப்படத்திற்கு இந்தியாவில் முதல் முறையாக, படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன் முன்பதிவு தொடங்கப்பட்டது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் தியேட்டரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் மொழிகளில் மே 6, 2022 அன்று வெளியாகவுள்ளது.
உலக திரை வரலாற்றில் ஒவ்வொரு முறை பாக்ஸ்ஆபிஸ் சாதனை முறியடிக்கபடும் போதும், மார்வல் திரையுலகின் திரைப்படம் அதில் இருக்கும், அதுபோல இந்த முறை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ் திரைப்படம் ஒரு புது சாதனையை நிகழ்த்தவுள்ளது. டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளியாகவுள்ள இந்த திரைப்படம், அட்வான்ஸ் முன்பதிவு மூலமாகவே 10 கோடி வரை இந்தியாவில் வசூலித்துள்ளது, இன்னும் படம் வெளியாக 8 நாட்கள் உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
மார்வல் ஸ்டுடியோஸ் உடைய “டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் 2022-ல் உலகமெங்கும் அனைத்து திரை ரசிகர்களாலும் எதிர்பார்க்கபடும் திரைப்படமாக உள்ளது. இந்த மிகப்பிரமாண்டமான பொழுதுபோக்கு திரைப்படம் வெளியீட்டிற்கு 30 நாட்களுக்கு முன்னர், அட்வான்ஸ் முன்பதிவு செய்யும் விஷயத்தில், ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஹாலிவுட் திரைப்படத்தில் இப்படியொரு அட்வான்ஸ் முன்பதிவு செய்வது இதுவே முதல்முறை.
திரைப்படம் அடுத்த வாரம் வெளியாக தயாராக உள்ளது. படத்தின் முன்பதிவு எண்ணிக்கை ஒரு பிளாக்பஸ்டருக்கான ஆரம்ப அறிகுறிகளை கொண்டுள்ளது.
கமல் ஜியான்சந்தனி- CEO - PVR pictures கூறியாதவது...,
“மார்வல் திரைப்படங்கள் எப்பொழும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ஒரு மேஜிக்கை நிகழ்த்தும். ஒரு மாதத்திற்கு முன்னரே அட்வான்ஸ் புக்கிங் செய்யும் முடிவு, ஸ்டூடியோ செய்ய புத்திசாலிதனமான விசயங்களில் ஒன்று. அட்வான்ஸ் புக்கிங்கிற்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது, ரசிகர்களிடமிருந்து வரும் வரவேற்பு, இந்தியா முழுவதும் ஷோக்களை சீக்கிரம் ஹவுஸ்புல் ஆக்கிவிடும்”
தேவங் சம்பத், CEO Cinepolis கூறியதாவது,
“மார்வல் திரைப்படங்களுக்கு இந்தியாவில் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு உள்ளது, அத்தோடு இந்த திரைப்படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. அவெஞ்சர்: எண்ட் கேம் திரைப்படத்திற்கு தான் ரசிகர்கள் மத்தியில் கடைசியாக பெரிய முன்பதிவுகள் இருந்தது, இந்தியா முழுவதும் பெரும் ரசிகர்களின் பிரமாண்ட வரவேற்போடு, அடுத்த மார்வல் பிளாக்பஸ்டர் வெளியாகவுள்ளது. Cinépolis இந்தியாவில் 400 திரைகளில் இந்த திரைப்படத்தை வெளியிடுகிறது.”
ராஜேந்தர் சிங் ஜியாலா, Chief Programming Officer, INOX Leisure கூறியாதவது..,
“மெட்ரோ நகரங்களில் எப்போதும் மார்வல் படத்திற்கு பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கும், ஆனால் இந்த முறை டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் திரைப்படத்திற்கு குறுநகர மார்கெட்களில் வந்த வரவேற்பு எங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. மார்வெல் திரைப்படங்கள் மற்றும் கதாபாத்திரங்கள் பல ஆண்டுகளாக உருவாக்கிய பிம்பத்தை, இது காட்டுகிறது. ஐநாக்ஸ் திரையரங்குகளில் முன்பதிவு எண்கள் அபரிமிதமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் படம் பெரிய எண்ணிக்கையுடன் திரையிடப்படவுள்ளது."
“டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் தி மல்டிவர்ஸ் ஆஃப் மேட்னஸ்” திரைப்படம் தியேட்டரில் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் மே 6, 2022 அன்று வெளியாகவுள்ளது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
மார்வெல்னா சும்மாவா? ரிலீசுக்கு முன்பே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டிய DOCTOR STRANGE IN THE MULTIVERSE OF MADNESS! வீடியோ