'2 மாசம் கூட ஆகல' அதுக்குள்ள... மகளின் புகைப்படத்தை 'வெளியிட்ட' பிரபல நடிகை!
முகப்பு > சினிமா செய்திகள்கண்ணன் வருவான், பாளையத்து அம்மன், வேதம் போன்ற படங்களில் நடித்து பிரபலமான நடிகை திவ்யா உன்னி திருமணத்திற்கு பின் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். கேரளாவை சேர்ந்த இவர் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினியாட்டம் போன்ற நடனங்களை சிறந்த முறையில் கற்றுத்தேர்ந்த நடனக்கலைஞர் ஆவார். தனிப்பட்ட முறையில் நடனத்திற்காக பல்வேறு விருதுகளையும் திவ்யா உன்னி பெற்றுள்ளார்.

தற்போது அமெரிக்காவில் நடனப்பள்ளி நடத்தி வரும் திவ்யா உன்னி பிறந்து 2 மாதங்கள் ஆன தனது பெண் குழந்தையின் அழகான புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில், '' பிறந்து 2 மாதம் தான் ஆகிறது. அதற்குள் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க கற்றுக்கொண்டு விட்டார்,'' என குறிப்பிட்டு இருக்கிறார். மேலும் இந்த புகைப்படத்தை அவரது அப்பா தான் எடுத்ததாகவும் திவ்யா பகிர்ந்து கொண்டிருக்கிறார்.