www.garudabazaar.com

VIDEO: பீஸ்ட் அரபிக்குத்து பாட்டுக்கு சும்மா நச்சுன்னு நடனமாடிய திவ்யபாரதி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: பீஸ்ட் அரபிக்குத்து பாடலுக்கு நடிகை திவ்யபாரதி ஜாலியாக நடனமாடியுள்ளார்.

Divaya Bharathi Dancing Beast Arabic Kuthu Sema Viral Video

இயக்குனர் நெல்சன் திலிப்குமர் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இவர்களுடன் செல்வராகவன், விடிவி கணேஷ், யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார், ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார்.

Divaya Bharathi Dancing Beast Arabic Kuthu Sema Viral Video

இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் 3 போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. பீஸ்ட் படத்தை ஏப்ரல் 2022ல் திரையில் வெளியிட படக்குழு முன்னர் அறிவித்தனர்.  பீஸ்ட் படத்தின் வெளியீடு தமிழ் புத்தாண்டு ஏப்ரல் மாதத்தில் 14 ஆம் நாள் அன்று வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

Divaya Bharathi Dancing Beast Arabic Kuthu Sema Viral Video

பீஸ்ட் திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான அரபிக் குத்து பாடல், கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. சிவகார்த்திகேயன் இந்த பாடலை எழுதியுள்ளார். அனிருத் இசையமைத்து ஜோனிதா காந்தியுடன் இணைந்து பாடியுள்ளார். இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா, இயக்குனர் அட்லி, பாடகி ஜோனிதா காந்தி, வேதிகா, பூஜா ஹெக்டே, நெல்சன் மகன் ஆத்விக் உள்ளிட்ட பலரும் அரபிக் குத்து பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்தனர்.

இந்த பட்டிலில் நடிகை திவ்யபாரதியும் இடம் பிடித்துள்ளார். அரபிக்குத்து பாடலுக்கு தனது தோழியுடன் அமர்ந்து நச்சென க்யூட் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் டிரெண்ட் ஆகி உள்ளது. 

சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்,முனீஷ் காந்த், பகவதி பெருமாள் மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் Bachelor. இந்த திரைப்படத்தில் நாயகியாக நடித்து புகழ் பெற்றுள்ளவர் திவ்யபாரதி.

தற்போது நடிகை திவ்ய பாரதி முகேன் ராவுடன் மதில் மேல் காதல் படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தில் நடிகர் முகேன் ராவ் மற்றும் திவ்ய பாரதி ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாக்‌ஷி அகர்வால், அனுஹாசன், கஸ்தூரி, பாண்டியராஜ், சுப்பு பஞ்சு, நிழல்கள் ரவி, சுரேகா, தீப்ஸ், KPY பாலா, ஆலியா, ஹாட்லீ, வைதேகி, ஸ்ரீநிதி, சிராஜ், ஜெய் சங்கர் செல்வராஜ், வாசு விக்ரம் மற்றும் ராஜி சாரதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடிக்கின்றனர்.

மேலும் மலையாளத்தில் ஹிட்டடித்த 'இஷ்க்' ISHQ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் கதிருடன் நடித்து வருகிறார்.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Divaya Bharathi Dancing Beast Arabic Kuthu Sema Viral Video

People looking for online information on Arabic Kuththu, Arabic Kuthu, Beast, Dhivya Bharathi, Divya Bharathi, Pooja Hegde, Vijay will find this news story useful.