www.garudabazaar.com

“miss you always”… “ஹேப்பி பர்த்டே”…. மறைந்த மனைவிக்கு ’கனா’ இயக்குனரின் emotional பதிவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் மற்றும் நடிகர் அருண் ராஜா காமராஜா தனது மனைவியின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

Director arun raja kamaraja birthday post for his late wife

பன்முகக்கலைஞர்….

நடிகர் சிவகார்த்திகேயனின் கல்லூரி நண்பரும் இயக்குனர் நெல்சனின் உதவியாளருமான அருண் ராஜா காமராஜா ’கனா’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்றவர். அருண்ராஜா காமராஜா தொடக்ககாலத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். தொடர்ந்து திரைத்துறையில் நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் பாடலாசிரியராகவும் வலம் வந்த அருண்ராஜா காமராஜா சிவகார்த்திகேயனின் தயாரிப்பில் கனா திரைப்படத்தை இயக்கி வெற்றியடைந்தார்.

Director arun raja kamaraja birthday post for his late wife

கொரோனா மரணம்…

இந்தப் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து  போனி கபூரின் ஜீ ஸ்டுடியோஸ் தயாரிப்பிலான இந்தி படமான ஆர்டிகள் 15 படத்தினை உதயநிதி ஸ்டாலினை வைத்து தமிழில் இயக்கி வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடந்த போது  அருண்ராஜா காமராஜாவின் மனைவி சிந்துஜா கொரோனா தொற்று காரணமாக மரணம் அடைந்தார். இது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடைந்து போன அருண் ராஜாவுக்கு ஆறுதல் சொல்லித் தேற்றினர்.

Director arun raja kamaraja birthday post for his late wife

மனைவியின் பிறந்தநாள்…

மனைவிக்கு இழப்புக்குப் பிறகு அவ்வப்போது அவர் தன்னுடைய மனைவி பற்றிய பதிவுகளை சமூகாவலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது அவரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூகவலைதளத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, அதில் “எப்போதும் உன்னை மிஸ் செய்கிறேன். ஹேப்பி பர்த்டே பாப்பி” எனக் கூறியுள்ளார். அவரின் இந்த பதிவில் ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Director arun raja kamaraja birthday post for his late wife

People looking for online information on Arun raja kamaraja, Sivakarthikeyan will find this news story useful.