ஆஹா.. இயக்குநர் பாக்யராஜ்.. சீரியலில் சிறப்பு எண்ட்ரி .. அதுவும் இப்படி ஒரு கேரக்டரா.?
முகப்பு > சினிமா செய்திகள்80கள் மற்றும் 90கள் காலக்கட்டம் முதல் இயக்குநராகவும், நடிகராகவும் பிரபலமானவர் இயக்குநர் கே.பாக்யராஜ்.

குடும்ப ஆடியன்ஸ்களையும் சரி, அப்போதைய இளைஞர்களையும் சரி, தமக்கே உரிய நகைச்சுவை கலந்த சென்சிபிள் திரைக்கதையால் ஆச்சரியப்பட வைக்கும் கே.பாக்யராஜ், இயக்குநர், நடிகர், பாடகர், இசையமைப்பாளர், வசனகர்த்தா என பன்முகம் கொண்டவர்.
தான் நடித்த படங்களிலும், பிற இயக்குநர்களின் திரைப்படங்களிலும் நடித்துள்ள பாக்யராஜ், அக்காலம் முதல் இக்கால இளம் நடிகர்கள் வரை பலருடன் இணைந்து நடித்துள்ளார். வெள்ளித்திரையில் அறிமுகமே தேவைப்படாத இயக்குநர் & நடிகர் பாக்யராஜ், தற்போது பிரபல ஜீ தமிழ் சீரியலில் சிறப்பு தோற்றத்தில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
ஆம், ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் வித்யா நம்பர் 1 எனும் சீரியலில் தான் நாயகி வித்யாவுடன் திருமணம் ஆகிவிட்டதாகக் கூறி ரஞ்சித் சூழ்ச்சி செய்ய, இதில் இருந்து வித்யா எப்படி மீண்டு வரப்போகிறார் என்பதை நோக்கி கதை நகர்கிறது. இதில் கோர்ட் வரை சென்றுவிட்ட இந்த வழக்கில் ஒரு முக்கியமான திருப்பம் ஏற்படும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இந்த வழக்கில் தான், தீர்ப்பு சொல்லப்போகும் நீதிபதி கேரக்டருக்கு சிறப்பு எண்ட்ரியாக இயக்குநர் மற்றும் நடிகர் பாக்யராஜ் நடித்து வருகிறார். பாக்யராஜ் பங்குபெறும் இந்த எபிசோடுகளில் அவர் தனக்கே உரிய இயல்பான மற்றும் எதார்த்தமான நடிப்பால் சீரியல் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுவருகிறார்.