www.garudabazaar.com

"அந்த மனசுதான் சார்".. ‘தாராள பிரபு’ நாயகி செய்த நெகிழ்ச்சி காரியம்!.. குவியும் பாராட்டுகள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அருண் விஜய் நடித்த ‘தடம்’, நடிகர் ஹரீஷ் கல்யாண் நடித்த ‘தாராள பிரபு’ போன்ற வெற்றி படங்களில் நடித்தவர் தான்யா ஹோப்.

Dharala Prabhu Tanya Hope heartfelt service to people தான்யா ஹோப்

இவர் அசாதாரணமான பாண்டமிக் காலகட்டத்தில் பல்வேறு மக்கள் பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகிறார். குறிப்பாக எளிய மக்களின் பசியை போக்கும் விதமாக உணவளித்து வருவதற்காக பல தரப்பிலும் இருந்து இவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.

இதற்காக மாதம் ஒரு கிராமத்தை தேர்வு செய்யும்  தான்யா ஹோப் அந்தந்த கிராமத்தில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு உணவு அளித்து வருகிறார்.

இந்த திட்டத்தின் மூலம் சராசரியாக 200 நபர்களின் உணவு தேவையை பூர்த்தி செய்து வருகிறாராம்.

‘ஷைன் சில்டரன் ஹோம்’ என்கிற தொண்டு நிறுவனத்துக்கு ஒவ்வொரு மாதமும் பொருளாதார ரீதியாகவும் பக்கபலமாக இருக்கிறாராம்.

தான்யாவின் இந்த சேவை மனபான்மைக்கு பல்வேறு பாராட்டு குவிந்து வருவதுடன், பயனடைந்தவர்கள் பலரும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Also Read: அப்டி போடு!!! அட்டகாசமான சட்ட திருத்தம்.. ‘அங்காடித் தெரு’ படத்தை குறிப்பிட்டு அரசுக்கு நன்றி சொல்லி இயக்குநர் நெகிழ்ச்சி!

மேலும் செய்திகள்

Dharala Prabhu Tanya Hope heartfelt service to people தான்யா ஹோப்

People looking for online information on Dharala Prabhu, Dharala Prabhu Tamil, Harish Kalyan, Tanya Hope will find this news story useful.