www.garudabazaar.com

கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமாருடன் ஐபிஎல் போட்டியை கண்டுகளித்த தனுஷ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில், சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம்  ‘கேப்டன் மில்லர்’ படத்தினை தயாரிக்கிறது. ‘ராக்கி’, ‘சாணி காயிதம்’ படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் இந்த கேப்டன் மில்லர் திரைப்படத்தினை இயக்குகிறார்.

Dhanush and Shiva Rajkumar watched CSK vs RCB Match in Bengaluru

பிரம்மாண்டமாக உருவாக்கப்படவுள்ள இப்படம் 1930கள்-40களின் பின்னணியில் எடுக்கப்படும்  பீரியட் படமாக உருவாகவுள்ளது, மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த அக்டோபர் மாதம் 7 ஆம் தேதி முதல் தென்காசி மாவட்டத்தில் துவங்கியது. இந்த படப்பிடிப்பில் தனுஷ், ஜான் கொக்கன் கலந்து கொண்டனர்.

முன்னதாக இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக பிரத்யேக போஸ்டருடன் படநிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் நடிகர் சிவராஜ்குமாருடன் இணைந்து ஐபிஎல் தொடரை காணக் கூடிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதியது.

இதனிடையே நடிகர் தனுஷ், கர்ணன் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் மாரி செல்வராஜூடன் மீண்டும் இணைகிறார்.  ZEE Studios மற்றும் Wunderbar Films நிறுவனங்கள் இணைந்து, இதற்கான அதிகாரப்பூர்வ  அறிவிப்பை அண்மையில் வெளியிட்டுள்ளன. நடிகர் தனுஷின் திரை வரலாற்றில், மிகப்பெரும் பொருட்செலவில், மிகப்பிரமாண்டமாக இப்படம் உருவாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush and Shiva Rajkumar watched CSK vs RCB Match in Bengaluru

People looking for online information on Captain Miller, CSKvRCB, Dhanush, IPL, RCBvCSK, Shiva Rajkumar, Siva raj Kumar will find this news story useful.