"எந்திரிங்க அப்பா".. நடிகர் சிவநாராயண மூர்த்தி மறைவுக்கு கதறி அழுத மகள் ஶ்ரீ தேவி..
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல நகைச்சுவை நடிகர் பட்டுக்கோட்டை சிவ நாராயணமூர்த்தி தன்னுடைய 66வது வயதில் காலமானார்.

Also Read | விஷால் நடிக்கும் "லத்தி'.. சென்சார் போர்டு கொடுத்த சர்டிபிகேட் விவரம்.. ரிலீஸ் எப்போ?
நேற்று இரவு 8:30 மணியளவில் சிவநாராயண மூர்த்தி மரணமடைந்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டையை சார்ந்த இவர் பூந்தோட்டம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்த இவர் சுமார் 300 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இவர் முருக பக்தராக அந்த பகுதியில் அறியப்படுகிறார். கிருபானந்த வாரியார் சுவாமிகளின் தொண்டராகவும் இவர் இருந்துள்ளார்.
இவருக்கு 2 ஆண் (லோகேஷ், ராம்குமார்) மற்றும் 1 பெண் (ஸ்ரீதேவி) பிள்ளைகள் உள்ளனர். இதில் மகள் ஶ்ரீ தேவி, தந்தையின் உடலுக்கு கதறி அழுது கண்ணீர் அஞ்சலி செலுத்தியது காண்போரை நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது. இதுவரை நீங்க வாழவே இல்லை எந்திரிங்க அப்பா" என ஶ்ரீ தேவி அழுதது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இறுதி சடங்கு அவருடைய சொந்த ஊரான பட்டுக்கோட்டையில் மதியம் 02.00 மணிக்கு நடைபெற்றது.
Also Read | BREAKING: கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் ஜிகர்தண்டா - 2.. படத்தின் தாறுமாறான அப்டேட்!