தமிழகத்தின் பொழுதுபோக்கு சேனலான கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி, விரைவில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘எங்க வீட்டு மீனாட்சி’ என்னும் தொடருக்கான புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ள்து.

இந்த புதிய ப்ரோமோவின் சிறப்பம்சமாக இந்த தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகை பூர்ணிமா பாக்யராஜை அறிமுகம் செய்வதோடு இத்தொடரில் நடிக்கும் முக்கிய கதாபாத்திரங்களையும் பெரிய பின்னணியில் அமைக்கப்பட்ட கதைக்களத்தின் ஒரு கண்ணோட்டத்தை பார்வையாளர்களுக்கு அளிக்கிறது.
வள்ளியம்மையின் (நடிகை பூர்ணிமா பாக்யராஜ்) குடும்ப உறுப்பினர்களை மீனாட்சியின் கண்களில் இருந்து அழகாக (நடிகை ஸ்ரீதா சிவதாஸ்), அறிமுகப்படுத்தும் விதமாக ஒரு பாரம்பரிய செட்டிநாடு வீட்டின் உள்ளே மிகவும் அற்புதமாக பயணிக்கும் வகையில் இந்த ப்ரோமோ எடுக்கப்பட்டுள்ளது. மீனாட்சி, சிதம்பரத்தை அறிமுகப்படுத்துகிறார் (நடிகர் ஜீவா). அந்த அறிமுகமானது இருவருக்கும் இடையே ஒரு அழகான காதல் இருப்பதைக் காட்டுகிறது.
மகிழ்ச்சியாக அந்த குடும்பம் இருக்கும் சூழலில் அனைவரும் ஒன்றாக அமர்ந்து குடும்ப புகைப்படம் எடுக்க இருக்கின்றனர். அப்போது புகைப்படத்தில் சிதம்பரம் நிற்கக் கூடாது என்று கூறி அவரை வெளியே போகும்படி வள்ளியம்மை கூறுகிறார். ஏன் அவர் அவ்வாறு கூறுகிறார், இத்தொடரில் என்ன நடக்கவிருக்கிறது என ஆர்வத்தை தூண்டும் வகையில் இந்த புதிய ப்ரோமோ அமைந்துள்ளது.
கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள இந்த புதிய தொடர் குறித்து நடிகை பூர்ணிமா பாக்யராஜ் கூறுகையில், “முதல் முறையாக கலர்ஸ் தமிழோடு இணைந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு புத்துணர்ச்சியூட்டும் கதைக்களத்தில், திறமையான கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றுவது என்பது எப்போதுமே மகிழ்ச்சி அளிக்கிறது. எங்க வீட்டு மீனாட்சி தொடரில் நான் நடித்திருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும் எனது நடிப்பை பார்வையாளர்கள் நிச்சயம் ரசிப்பதோடு எங்களுடன் இணைவார்கள் என்று நான் நம்புகிறேன் என்று தெரிவித்தார்.
எங்க வீட்டு மீனாட்சி விரைவில் கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.