777 Charlie Trailer

போடு வெடிய..விக்ரம் நடிக்கும் "கோப்ரா".. UK & ஐரோப்பிய உரிமத்தை கைப்பற்றிய பிரபல TOP வினியோகஸ்தர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

”கோப்ரா” படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் ‘டிமாண்டி காலனி’, கடந்த 2018 ஆம் ஆண்டு நயன்தாரா, அதர்வா, அனுராக் காஷ்யப் நடிப்பில் ‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Cobra Movie UK Europe Rights Bagged By Ahimasa

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

Cobra Movie UK Europe Rights Bagged By Ahimasa

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள்,  சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கடந்த ஏப்ரல் 22 அன்று ஆதீரா எனும் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. A. R ரஹ்மான் இசையில், பா.விஜய் வரிகளில் இந்த பாடல் உருவாகி உள்ளது. கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இச்சூழலில் கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிறுவனம்  வலிமை, பீஸ்ட், விக்ரம் படங்களை ரிலீஸ் செய்த நிறுவனம் ஆகும்.

Tags : Cobra, Vikram

தொடர்புடைய இணைப்புகள்

Cobra Movie UK Europe Rights Bagged By Ahimasa

People looking for online information on Cobra, Vikram will find this news story useful.