அப்ப ‘பஞ்சாயத்து டிவி’ ஓடுச்சு.. இப்ப ‘டிவில பஞ்சாயத்து தான்’ ஓடுது.. 'ஆன்டி இண்டியன்' Trailer!
முகப்பு > சினிமா செய்திகள்திரைப்படங்களை விமர்சனம் செய்ததன் மூலம் பிரபலமான ப்ளூ சட்டை மாறன் இயக்கியுள்ள ‘அறிமுக’ திரைப்படம் ஆன்டி இண்டியன்.

ப்ளூ சட்டை மாறனின் கதை, வசனம், இசை, இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகும் இந்த படத்தில் ‘ஆடுகளம்’ நரேன், ‘வழக்கு எண்’ முத்துராமன், ராதாரவி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளதை அடுத்து பலரும் இந்த டிரெய்லரை பார்த்தும் பகிர்ந்தும் கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். சென்னையில் நடந்த இந்த டிரெய்லர் வெளியீட்டு விழாவில் முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர். அவர்கள் முன்னிலையில் ஆன்டி இண்டியன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
டிரெய்லரை பார்க்கும்போது, அரசியல் கட்சிகளுக்கு போஸ்டர் ரெடி பண்ணும் பாட்ஷா என்கிற கேரக்டரில் ப்ளூ சட்டை மாறன் நடித்திருப்பது தெரிகிறது.
பாட்ஷா என்கிறா அந்த கேரக்டர் இறந்து போய் அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டப்படுகிறது. அவரது இறப்பை சுற்றி பல்வேறு மதவாதிகள் பண்ணும் அரசியலை நையாண்டி பாணியில் படமாக்கியிருக்கிறார்கள்.
மேலும் இந்த டிரெய்லரை இவற்றை மையப்படுத்தி பல வசனங்கள் நறுக்காக இருக்கின்றன. மதத்தை நம்பும் மக்களுக்கும் மதத்தை வைத்து அரசியல் பண்ணுபவர்களுக்குமான வேறுபாடுகளை சொல்லும் பல வசனங்கள் படத்தில் இடம்பெற்றுள்ளன. இதேபோல் “அப்பலாம்பஞ்சாயத்து டிவி ஓடுச்சு.. இப்பலாம் எல்லா டிவிலயும் பஞ்சாயத்து தான் ஓடுது” என்கிற வேற லெவல் வசனமும் இடம் பெற்றுள்ளது.
தவிர டிரெய்லரில் ப்ளூ சட்டை மாறனின் குரலை மட்டுமே கேட்க முடிகிறது. அவர் தோன்றவே இல்லை. குறிப்பாக, “வா.. வா.. வராத எங்க போய்ட போற நீ? உனக்காக தான் அரிவாள தீட்டி வெச்சுக்கிட்டு உக்காந்துருக்காங்க.. வா..வா..” என்கிற வசனமும் வருகிறது.
அதாவது பலரும் ப்ளூ சட்டை மாறனின் படத்தை எதிர்பார்த்து விமர்சிக்க காத்திருக்கிறார்கள் என்பதை குறிப்பால் உணர்த்துகிறது இந்த வசனம். இதனிடையே, பலரும் ப்ளூ சட்டை மாறனுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.