RRR Others USA
www.garudabazaar.com

பிக்பாஸ் கொடுத்த ஷேர் ஆட்டோ டாஸ்க்... பரபரப்பான எபிசோட்.. அரங்கேறும் சம்பவங்கள்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் அல்டிமேட்டில் சமீபத்தில் பிக்பாஸ் கொடுத்த டாஸ்க் ஒன்று ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது.

bigg boss ultimate interesting share auto task

மீரா மிதுன் வழக்கு.. சர்ச்சை பேச்சு விவகாரத்தில் மீண்டும் நீதிமன்றம் புதிய உத்தரவு ?

சின்னத்திரையில் பிக்பாஸ்

தமிழ் சின்னத்திரையில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்து சீசன்களும் ஏற்படுத்தியுள்ளன. அந்த சீசன்களின் வெற்றியை அடுத்து இப்போது பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி கடந்த ஜனவரி 30ஆம் தேதி முதல் டிஸ்னி+ ஹாட் ஸ்டாரில்  24 மணி நேரமும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 14 போட்டியாளர்கள் பங்கேற்றனர். அவர்களில் சுரேஷ் சக்கரவர்த்தி, சுஜா வருணி, அபினய், ஷாரிக் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். வனிதா தனக்கு மன அழுத்தம் ஏற்பட்டதாக கூறி பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

சிம்புவின் வரவு

கமல்ஹாசன் விக்ரம் பட ஷூட்டிங் காரணமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக விலகியதாக அறிவித்தார். அவருக்கிப் பின் இப்போது சிம்பு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். சிம்புவின் வருகையை அறிந்த போட்டியாளர்கள் அவருக்கு ஆரவாரமான வரவேற்பைக் கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலானது. போட்டியாளர்களிடம் இயல்பாக பழகி கமல் போலவே நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக எடுத்து செல்கிறார் சிம்பு.

bigg boss ultimate interesting share auto task

பிக்பாஸ் கொடுத்த ஷேர் ஆட்டோ டாஸ்க்

இப்போது பரபரப்பான கட்டத்தை எட்டிவரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிக்பாஸ் அவ்வப்போது போட்டியாளர்களுக்கும் கொடுக்கும் டாஸ்க்குகள் சுவாரஸ்யமாக அமைகின்றன. அந்த வகையில் தற்போது போட்டியாளர்களுக்கு கொடுக்கப்பட்ட கார் டாஸ்க் எபிசோட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஷேர் ஆட்டோவில் பயணிகள் நெருக்கமாக உட்கார்ந்து செல்வது போல அமைந்தது டாஸ்க். இந்த வார லக்ஸுரி பட்ஜெட்டுக்காக பிக்பாஸ் கொடுத்த அந்த டாஸ்க்கில் ‘கொடுக்கப்பட்ட காரில் போட்டியாளர்கள் அனைவரும் உட்காரவேண்டும். ஆனால் அனைவருக்கும் போதுமான இடம் அந்த காரில் இல்லை. நெருக்கியடித்துக் கொண்டு உடகார்ந்திருந்தனர்.

இந்த டாஸ்க்கை மேலும் கடினமாக்கும் விதமாக காரின் வெளிப்பகுதியில் தண்ணீர் விழுவது போல வைக்கப்பட்டு இருந்தது. இதனால் போட்டியாளர்கள் கொஞ்சம் கூட உடலை வெளியே வைத்திருக்க முடியாது. இதனால் காரில் நெருக்கியடித்து உட்கார்ந்திருந்த ஒவ்வொருவாக தோல்வியை ஒத்துக்கொண்டு வெளியேறிவிட்டனர். கடைசி வரை விட்டுக்கொடுக்காமல் விளையாடிய பாலா வின்னராக அறிவிக்கப்பட்டார்.

bigg boss ultimate interesting share auto task

சமீபத்தைய டாஸ்க்குகள்

பிக்பாஸ் கொடுக்கும் வித்தியாசமான டாஸ்க்குகளால் வாராவாரம் நிகழ்ச்சி சுவாரஸ்யமாகி வருகிறது. சமீபத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்க்கில் நிருப்புக்கும் இன்னொரு போட்டியாளருக்கும் திருமணம் நடந்தது மற்றும் பாலாஜியிடம் அபிராமி கோபித்துக் கொள்வது போன்ற நிகழ்ச்சிகள் விறுவிறுப்பை ஏற்படுத்தின. அனிதாவுக்கும் பாலாஜிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த எபிசோட்கள் எல்லாம் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்கி வருகின்றன.

மீண்டும் இணைந்த காஞ்சனா ஹிட் கூட்டணி… ருத்ரன் டீம் வெளியிட்ட செம்ம அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

bigg boss ultimate interesting share auto task

People looking for online information on BB Ultimate, Bigg Boss Tamil, Bigg Boss Ultimate, Bigg Boss Ultimate Auto Task, SilambarasanTR, Vijay Television will find this news story useful.