www.garudabazaar.com

பிக்பாஸ் வீட்டைவிட்டு 'இந்த' வாரம் வெளியேறியது இவர்தான்... காரணம் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் கடந்த வாரம் பாலாஜி, ஆரி, நிஷா, சோம், ஜித்தன் ரமேஷ், அனிதா, சனம் ஆகியோர் சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்டனர். யாரும் எதிர்பாராதவிதமாக டாப்பிள் கார்டை வைத்து வேறு யாரையாவது நாமினேட் செய்யலாம் என பிக்பாஸ் அறிவித்தார். இதில் நாமினேஷன் பட்டியலில் இருந்த போட்டியாளர்கள் டாப்பிள் கார்டுக்காக விவாதம் செய்தனர்.

Bigg Boss Tamil 4: Who is evicted this week? details here

நிஷாவுக்கு அந்த கார்டு கிடைத்தும் கூட அனிதா வீசிய தூண்டிலில் மாட்டிய நிஷா நான் மக்களிடம் சென்று மீண்டும் வருகிறேன் என கார்டை அனிதாவுக்கு கொடுத்தார். டாப்பிள் கார்டை வென்ற அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்தார். இதனால் பிக்பாஸ் வீட்டைவிட்டு இந்த வாரம் வெளியேறப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

இதற்கிடையில் ஜித்தன் ரமேஷ் குறைவான வாக்குகள் வாங்கி வீட்டை விட்டு வெளியேறியதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் தற்போது சம்யுக்தா வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். சம்யுக்தா பேசிய வளர்ப்பு சரியில்லை என்னும் வார்த்தை கமலுக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியதாகவும் இதனால் தான் அவர் நிகழ்ச்சியை விட்டு வெளியேற்றப் பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss Tamil 4: Who is evicted this week? details here

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.