www.garudabazaar.com

என்ன 'பொசுக்குன்னு' இப்படி பண்ணிட்டீங்க?... 'ஆங்ரி' பேர்டான ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ப்ரோமோ போட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் உண்டு செய்து நிகழ்ச்சி பார்க்கும் போது இவ்ளோ தானா? என்பது போல சமீபகாலமாக பிக்பாஸ் நிகழ்ச்சி இருந்து வருகிறது. ஒன்று ப்ரோமோவில் வந்த இண்ட்ரெஸ்டிங் காட்சிகளை கட் செய்து விடுவார்கள். இல்லை எனில் அது நிகழ்ச்சியிலேயே இருக்காது.

Bigg Boss not Telecasted Balaji's Birthday Celebration

நேற்று எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே பிக்பாஸ் சென்று விட்டார். இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் வரிசைப்படி ஒன்று முதல் பதிமூன்று வரை நிற்பதாக காண்பிக்கப்பட்டது. மூன்றாவது ப்ரோமோவில் பாலாஜி முருகதாஸ் பிறந்தநாளுக்கு கேக் கட் செய்வது போல காட்சிகள் இருந்தன. இதைப்பார்த்த ரசிகர்கள் பர்த்டே வீடியோ இவ்ளோ சீக்கிரம் போட்டுட்டீங்க? என கலாய்த்து விட்டனர்.

ஆனால் நிகழ்ச்சியில் இந்த காட்சிகளே இல்லை. யார் டாஸ்க்கை சிறப்பாக செய்தது? என ஆலோசனை நடத்தும்போது சனம்-ரமேஷ் இருவரும் சண்டை போட நிகழ்ச்சி அத்துடன் முடிவுக்கு வந்தது. இதைப்பார்த்த ரசிகர்கள் கண்டெண்ட் இல்லையா? இல்லனா ப்ரோமோ மாத்தி போட்டு இப்படி பண்ணிட்டீங்களா? என காண்டாகி பிக்பாஸை வறுத்தெடுக்க ஆரம்பித்து இருக்கின்றனர்.

இனிமே ப்ரோமோ பார்த்தா டவுட்டாவே இருக்குமே!

தொடர்புடைய இணைப்புகள்

Bigg Boss not Telecasted Balaji's Birthday Celebration

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.