பிக்பாஸ் வீட்டில் இருந்து சற்றும் எதிர்பாராத விதமாக சம்யுக்தா நேற்று வெளியேறினார். கடந்த வாரம் சக போட்டியாளர்கள் நாமினேட் செய்த லிஸ்டில் சம்யுக்தா வரவில்லை. பிக்பாஸ் கொடுத்த டாப்பிள் கார்டை கைப்பற்றிய அனிதா தனக்கு பதிலாக சம்யுக்தாவை நாமினேட் செய்தார். இதையடுத்து இந்த லிஸ்டில் ஆரி, பாலாஜி, சனம், சோம், ஜித்தன் ரமேஷ், நிஷா ஆகியோருடன் சம்யுக்தா இணைந்தார்.

இந்த வாரம் நிஷா அல்லது ரமேஷ் இருவரில் ஒருவர் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆரி, பாலாஜி ஆகியோர் காப்பாற்றப்பட்டதாக நேற்று முன்தினம் கமல் அறிவித்தார். தொடர்ந்து நேற்று முதல் நபராக சோம் தொடர்ந்து சனம், நிஷா ஆகியோர் காப்பாற்றப்பட்டனர். ரமேஷ், சம்யுக்தா இருவர் மட்டுமே இருந்ததால் போட்டியாளர்கள் அனைவரும் ஒருவித பதட்டத்திலேயே இருந்தனர்.
#Samyuktha at her home 😍@samyuktha_shan #Biggbosstamil #Biggbosstamil4 pic.twitter.com/bO0Tb1W2Ln
— Gowtham ᴹᴵ (@MGR_VJ) November 29, 2020
அதிகம் சஸ்பென்ஸ் வைக்காமல் சம்யுக்தா வெளியேறுவதாக கமல் அறிவித்தார். மிகவும் வலிமையான போட்டியாளராக உருவெடுத்து வந்த சம்யுக்தா நாமினேஷன் பட்டியலில் நேரடியாக இடம் பெறவில்லை. ஆனாலும் அவர் வெளியேறி இருக்கிறார். இந்த நிலையில் சம்யுக்தா தன்னுடைய மகன் ரயான் உள்ளிட்ட குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.