Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Behindwoods Gold Icons விழாவில் மக்களின் பேவரைட் பிராங்ஸ்டர் ராகுல் என்ன விருது பெற்றுள்ளார் பாருங்க!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

Behindwoods Gold Icon award to prankster rahul பிராங்ஸ்டர் ராகுல் என்ன விருது பெற்றுள்ளார்

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.

இந்நிலையில் சிறந்த டிஜிட்டல் கண்டன்ட் உருவாக்கம் என்ற பிரிவில் Behindwoods Gold Icons விருதை தனது பிராங்க்குகளுக்கு பெயர் போன பிராங்ஸ்டர் ராகுல் பெற்றுள்ளார். பிராங்க் என்றாலே ராகுல் என்று பெயர் வாங்கும் அளவிற்கு இவரது விடியோக்கள் ஒவ்வொன்றும் மில்லியன் கணக்கில் ரசிகர்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில் தனது வீடியோக்கள் மூலம் சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்க முடியும் என்று காட்டிய இவர் உண்மையிலேயே சிறந்த வித்தைக்காரர் தான். இந்த விருதை அவருக்கு புட் சட்னி ராஜ்மோகன் வழங்கி சிறப்பித்துள்ளார். விருது பெற்ற பிராங்ஸ்டர் ராகுலுக்கு Behindwoods சார்பாக வாழ்த்துக்கள்..!

மேலும் செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

Behindwoods Gold Icon award to prankster rahul பிராங்ஸ்டர் ராகுல் என்ன விருது பெற்றுள்ளார்

People looking for online information on Behindwoods Gold Icon, Prankster Rahul will find this news story useful.