www.garudabazaar.com

Video: சம்யுக்தாவிடம் 'மன்னிப்பு' கேட்டு... ஷிவானியிடம் 'போட்டு' கொடுத்த சனம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று டெலிகாலர் டாஸ்க்கில் ஆஜீத்திடம், ரியோ பேசி 5 ஸ்டார்கள் கொடுத்தார். அதுவரை எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது. ஆனால் ஆஜீத்திடம் நான் தான் பேசுவேன் என்பது போல ரியோ முன்பே சொன்னதை கேட்டுவிட்ட சனம் வீட்டுக்குள் பெரிய பூகம்பமே ஏற்பட காரணமாகி விட்டார். இதையடுத்து ரம்யா, அனிதா, சனம் என மூவரும் அவரை வச்சு செய்து விட்டனர்.

BB Tamil 4: Netizens Praised Sanam Shetty's Brave Attitude

அதிலும் சனம் தன்னுடைய கருத்துக்களை மிகவும் தெளிவாக எடுத்து வைக்க ரியோவால் பல இடங்களில் பதில் சொல்ல முடியவில்லை. ஷிவானி கூட தன்னுடைய மவுனத்தை உடைத்து ரியோவிடம் கேள்வி கேட்டு விட்டார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். இதேபோல சம்யுக்தாவும் ரியோவிடம் சிலபல கேள்விகள் கேட்டு அவரிடம் இருந்து பதில்களை பெற்றார். இதற்கிடையில் சனம் இன்னும் ஒருபடி மேலே சென்று விட்டார்.

ரியோ முன்பே ஆஜீத்திடம் சொல்லிவிட்டு போன் பேசியதால் வெறுப்பான அவர் சம்யுக்தா நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நான் தான் உங்களிடம் பேசப்போகிறேன் என்பதை சொல்லாமல் போனதற்கு என்றார். பின்னர் ஷிவானி பக்கம் திரும்பி, உன்கூட ஆரி தான் பேசப்போறார் என அவரிடமும் உண்மையை போட்டு உடைத்து விட்டார். அனிதா, ஷிவானி, நிஷா, ஆரி என இவர்கள் நால்வர் மட்டுமே எஞ்சியுள்ளனர்.

ஆரி தற்போது ஷிவானியிடம் பேசப்போவது உறுதி ஆகிவிட்டதால், அனிதாவிடம் நிஷா பேசப்போவது தெளிவாகி விட்டது. இதனால் நாளைய எபிஸோடிலும் அனல் பறக்க வாய்ப்புகள் இருக்கின்றன. காத்திருப்போம்!

தொடர்புடைய இணைப்புகள்

BB Tamil 4: Netizens Praised Sanam Shetty's Brave Attitude

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.