www.garudabazaar.com

Video: பாலாஜிக்கு 'செக்' வைத்த பிக்பாஸ்... மறுபடியும் 'மொதல்ல' இருந்தா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று இந்த வாரத்துக்கான லக்சுரி பட்ஜெட் டாஸ்க்கை பிக்பாஸ் கொஞ்சம் வித்தியாசமாக கொடுத்து நம்மை விதவிதமாக சோதித்தார். அவர் சொன்ன ரூல்ஸ் ஒன்று இவர்கள் எடுத்துக்கொண்ட ரூல்ஸ் ஒன்று. இதனால் சப்-டைட்டில் போடுங்க பிக்பாஸ் என நிகழ்ச்சி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ரசிகர்கள் கதறியழ ஆரம்பித்து விட்டனர். அந்தளவுக்கு இந்த கோழி-நரி டாஸ்க் இருந்தது.

Balaji Murugadoss broke his egg in Task, Twitter reacts

இதில் ஆரி, பாலாஜி இருவரும் முதலில் கோழிகளாக மாற அர்ச்சனா, அனிதா, ரம்யா, ஆஜீத், கேப்ரியலா, ஷிவானி, சோம் மற்றும் ரியோ ஆகியோர் நரிகளாக மாறினர். பாலாஜி தன்னை  காத்து கொள்வதை விட ஆரிக்கு எதிராக இருக்கவே டீல் பேசினார். ஆரி முட்டையை நரியிடம் இழந்தார். இதையடுத்து இரண்டாவது ரவுண்டுக்கு செல்ல வேண்டிய பாலாஜி தன்னுடைய மொத்த வெயிட்டையும் முட்டை மீது வைத்து உட்கார, அது அப்பளம் போல நொறுங்கியது.

இதைப்பார்த்த பிக்பாஸ் நல்லா வெளையாடிட்டு இருந்தீங்க பாலாஜி ஆனா உங்க முட்டையை ஒடைச்சதால நீங்க ரெண்டாவது ரவுண்டுக்கு செல்ல முடியாது என சோகம் காட்டினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் லக்சுரி டாஸ்க்குக்கும் உங்களுக்கும் என்ன தான் பிரச்சினை? எப்ப பார்த்தாலும் சொதப்புறீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முந்தைய லக்சுரி டாஸ்க்குகளில் பாலாஜி மாற்றி விளையாடி சொதப்பியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Murugadoss broke his egg in Task, Twitter reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.