www.garudabazaar.com

'கர்மா இஸ் எ பூமராங்'னு சும்மாவா சொன்னாங்க... ரசிகர்கள் கிண்டல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த வாரம் சிறந்த பெர்பார்ம் செய்தவர்களாக தேர்வு செய்யப்பட்ட பாலாஜி, அர்ச்சனா, ரம்யா ஆகிய மூவரும் கேப்டன் பதவிக்காக நேற்று விளையாடினர். ஒவ்வொரு போட்டியாளருக்கும் 8 பைகள் கொடுக்கப்பட்டு இருக்கும். கம்பி போன்ற வலைக்கு வெளியே அதை ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை கொண்டு சென்று வெளியில் எடுக்க வேண்டும் என்பது தான் டாஸ்க்கின் விதியாக இருந்தது.

Balaji Murugadoss again failed captaincy Task, Twitter Reacts

இதில் அர்ச்சனா ஏற்கனவே ஒருமுறை கேப்டனாகி விட்டார். ரம்யாவோ இரண்டு முறை கேப்டனாகி விட்டார். மிச்சம் இருப்பது பாலாஜி மட்டும் தான் என்பதால் கண்டிப்பாக அவர் இந்த வாரம் கேப்டன் ஆவார் என எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் மறுபடியும் ஒருமுறை கேப்டன் பதவி அவருக்கு கானல் நீராகவே மாறிவிட்டது. அர்ச்சனா இரண்டாவது முறையாக கேப்டன் ஆகிவிட்டார்.

முன்பொருமுறை பாலாஜி, சோம், சம்யுக்தா மூவரும் கேப்டன் பதவிக்காக விளையாடியபோது பாலாஜி, சம்யுக்தாவுக்கு விட்டுக்கொடுத்து அவரை கேப்டன் ஆக்கி அழகு பார்த்தார். அப்போது வெற்றியின் விளிம்பில் இருந்த சோம், பாலாஜியின் இந்த செயலால் கேப்டன் பதவியை இழந்தார். அப்போது எனக்கு எப்போ கேப்டன் ஆகணும் தோணுதோ அப்பத்தான் நான் கேப்டன் ஆவேன் என பாலாஜி கூறியிருந்தார்.

ஆனால் அதுவே அவருக்கு பூமராங் போல மாறிவிட்டது. இதுவரை 5 முறை கேப்டன் பதவிக்காக போட்டியிட்ட பாலாஜி அதில் ஒருமுறை கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கேப்டன் பதவிக்கும் பாலாஜிக்கும் ராசியே இல்லை போல!

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Murugadoss again failed captaincy Task, Twitter Reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.