IndParty
www.garudabazaar.com

சொல்ற 'வேலைய' செய்ய மாட்றாரு... அப்போ 'இந்த' டைமும் கோவிந்தா தான்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயந்திர மனிதா டாஸ்க் நேற்று அர்ச்சனா அணியிடம் இருந்து பாலாஜி அணிக்கு மாறியுள்ளது. இதனால் தற்போது அர்ச்சனா அணியினர் மனிதர்களாகவும், பாலாஜி அணியினர் ரோபோக்களாவும் மாறி இருக்கின்றனர். சின்னச்சின்ன விஷயங்களை எல்லாம் சொல்லி அர்ச்சனா, பாலாஜி அணியினரின் ஹார்ட்டுகளை எடுத்து விட்டார்.

Balaji again and Again does the Same thing in BB House

இதில் பிக்பாஸ் தலையிடுவாரா? இல்லை பாட்டி சொல்லை தட்டாதே, டெலிகாலர் டாஸ்க் போல கடைசியில் வச்சு செய்வாரா? என்பது தெரியவில்லை. நேற்று அர்ச்சனா வியூகம் வகுக்கும்போது ஆரி, பாலாஜி இருவரிடமும் செல்ல வேண்டாம் என தன் அணியினருக்கு தடை பிறப்பித்தார். ஆனால் பாலாஜி சிரிப்பை அடக்க முடியாமல் தன்னுடைய ஹார்ட்டுகளை விரைவிலேயே இழந்து விட்டார்.

எனினும் அர்ச்சனா அணியில் ரம்யா போல பாலாஜி அணியில் ஆரி தொடர்ந்து தாக்கு பிடிப்பார் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் தாங்கள் சொல்வதை எல்லாம் பாலாஜி செய்ய மாட்டேன் என சொல்கிறார் என அர்ச்சனா, பிக்பாஸிடம் பெரிய புகார் பட்டியல் ஒன்றை நீட்டினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பாலாஜி ஏற்கனவே உன்னால லக்சுரி பட்ஜெட் நெறைய போயிருச்சு.

இந்த டைமும் நீ அதுக்கு தான் பிளான் பண்ற போல என அவரை சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகின்றனர். பாலாஜி அணியில் ஆஜீத், பாலாஜி, நிஷா ஆகியோர் விரைவில் தங்களது ஹார்ட்டுகளை இழந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Balaji again and Again does the Same thing in BB House

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.