சுசித்ராவுக்கு பிறகு பிக்பாஸ் நுழையும் பிரபல நடிகர்... அவரே வெளியிட்ட பதிவு..!
முகப்பு > சினிமா செய்திகள்பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன், விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தினமும் நடக்கும் சண்டை சச்சரவுகள் மூலம் பலரது முகத்திரை கிழிக்கப்பட்டு வருகிறது. மேலும் விறுவிறுப்பை கூட்ட அடுத்தடுத்து வைர்ல்டு கார்டு போட்டியாளர்கள் இறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் அடுத்ததும் ஒரு விஜய் டிவி பிரபலம் தான் நுழைய இருப்பதாக தகவல்கள் வைரலாகிறது.

ஆம் ஷிவானியின் ரீல் ஜோடி நடிகர் அசீம் நுழைய உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அசீம் பிக்பாஸ் வீட்டில் நுழைந்தால், எப்படிப்பட்ட மாற்றங்கள் நிகழ போகிறது என்பதை காண அனைவரும் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் அசீம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிக்பாஸ் பற்றிய அறிவிப்பு போன்றே அவர் ஒரு பதிவிட்டுள்ளார். அவர் கூறும்போது "நான் பேஸ்புக்கில் இல்லை. எனது பெயரை சிலர் தவறாகப் பயன்படுத்துகிறார்கள். தயவுசெய்து மக்கள் ஏமாற வேண்டாம். எதிர்பாராததை எதிர் பாருங்கள். சீக்கிரமே உங்களை சந்திக்கிறேன்" என்று கண் போன்ற எமோஜியை பதிவிட்டுள்ளார். இது பிக்பாஸை குறிக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்நிலையில் அவரே இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்று ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.
சுசித்ராவுக்கு பிறகு பிக்பாஸ் நுழையும் பிரபல நடிகர்... அவரே வெளியிட்ட பதிவு..! வீடியோ