Veetla Vishesham Others Page USA

நடிகர் கமல்ஹாசனை சந்தித்த அயலான் பட இயக்குனர்.. இதான் காரணமா? பின்னணி தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கமல்ஹாசனை அயலான் பட இயக்குனர் ரவிக்குமார் சந்தித்துள்ளார்.

Ayalaan maker Ravikumar with KamalHaasan Lokesh Kanagaraj

விஷ்ணு விஷால் நடிப்பில் ‘இன்று நேற்று நாளை’ திரைப்படத்தை எழுதி இயக்கியவர் இயக்குநர் ரவிக்குமார். இந்த படத்தின் நேர்த்தியான திரைக்கதைக்காக அதிக வரவேற்பையும் பாராட்டையும் பெற்றார் இயக்குனர் ரவிகுமார்.

இதனைத் தொடர்ந்து, ரவிகுமார் இயக்கத்திலான Hi-Concept படங்கள் மீது எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் ரவிகுமார் 'அயலான்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

Ayalaan maker Ravikumar with KamalHaasan Lokesh Kanagaraj

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘அயலான்’ திரைப்படத்தின் ‘வேற லெவல் சகோ’ சிங்கிள் பாடல் கடந்தாண்டு ஏற்கனவே வெளியாகியிருந்த நிலையில் படத்தின் நிறைவுப்பணிகளும் ரிலீஸ் பணிகளும் முழுவீச்சில் தயாராகி வருகின்றன. விரைவில் இப்படம் ரிலீசாக உள்ளது.

அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். அவருடன் சரத் கேல்கர், இஷா கோபிகர், யோகி பாபு, கருணாகரன், பானு ப்ரியா, பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நிரவ் ஷா ISC ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் எடிட்டராகவும் 'அயலான்' படத்தில் பணியாற்றியுள்ளனர்.

Ayalaan maker Ravikumar with KamalHaasan Lokesh Kanagaraj

இந்நிலையில், கமல்ஹாசனை ரவிக்குமார் சந்தித்து குறித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். அதில், "நான் வியந்து பார்க்கும் ஆளுமை. அவரோடு எடுத்துக்கொண்ட முதல் புகைப்படம். அவரிடம் லோகேஷ் என்னை அறிமுகம் செய்துவைத்ததும், டைம் டராவல்  பற்றிய ஒரு ஸ்பானிஷ் படத்தின் அம்சங்களை அவர் பகிர்ந்துகொண்டதும் இன்னும் வியப்பு குறையா நிமிடங்கள். வாழ்வின் பரவசம்🥰 கமல்ஹாசன். நன்றி லோகேஷ்" என பதிவிட்டுள்ளார்.

Ayalaan maker Ravikumar with KamalHaasan Lokesh Kanagaraj

விக்ரம் படத்தின் வெற்றிவிழா நிகழ்வில் இப்புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் கமல், லோகேஷ், அனிருத், உதயநிதி, மகேந்திரன், மதுரை அன்பு ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

தொடர்புடைய இணைப்புகள்

Ayalaan maker Ravikumar with KamalHaasan Lokesh Kanagaraj

People looking for online information on Ayalaan, Kamal Haasan, Lokesh Kanagaraj, Ravikumar, Vikram will find this news story useful.