www.garudabazaar.com

LATEST: அரண்மனை-3 படத்தின் மிரட்டலான திகில் கிளப்பும் டிரெய்லர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில், ஆர்யா நடிக்கும் திரைப்படம் ‘அரண்மனை-3' படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.

arya sundar c aranmanai 3 trailer released and went viral

இயக்குனர் சுந்தர்.சி இயக்கிய அரண்மனை மற்றும் அரண்மனை-2  படத்தின் முதல் இரண்டு பாகங்கள் மிகப்பெரும் வெற்றியை பெற்றது. அதனைத்தொடர்ந்து அரண்மனை 3 படம் ஆரம்பிக்கப்பட்டது. இந்த படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஆண்டே முழுமையாக முடிக்கப்பட்டு படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இந்த படத்தை ஆவ்னி சினிமேக்ஸ் நிறுவனம் சார்பில் குஷ்பு இப்படத்தினை தயாரித்துள்ளார்.  C.சத்யா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

arya sundar c aranmanai 3 trailer released and went viral

இந்த படத்தின் அனைத்து உரிமையை (Rights) உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் கைப்பற்றி உள்ளார். இந்தப்படம் அக்டோபர் மாதம் 14 ஆம் நாள் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு இந்த படத்தின் டிரெய்லர் இன்று செப்டெம்பர் 30 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியானது. 

arya sundar c aranmanai 3 trailer released and went viral

இந்த படத்தில் ஆர்யாவுடன், ராஷிக்கண்ணா, சுந்தர்.சி, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக இயக்குநர் சுந்தர்.சி உடன் பிரபல சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இந்த படத்தின் ஒளிப்பதிவை UK செந்தில்குமார் செய்துள்ளார். படத்தொகுப்பை ஃபென்னி ஆலிவர் கவனிக்கிறார்.

LATEST: அரண்மனை-3 படத்தின் மிரட்டலான திகில் கிளப்பும் டிரெய்லர்! எப்படி இருக்கு? வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

arya sundar c aranmanai 3 trailer released and went viral

People looking for online information on Aranmanai 3, Aranmanai Series, Arya, Raashi kanna, Sundar C, Vivekh, Yogi Babu will find this news story useful.