Pattamboochi

மகளை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தும் அர்ஜுன்… பிரபலங்கள் கலந்துகொண்ட பூஜை pics

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான் ஆக்ஷன் கிங் அர்ஜுன் சில படங்களை இயக்கியும் உள்ளார்.

Arjun directing a telugu movie starring his daughter

ஆக்ஷன் கிங் அர்ஜுன்

தன்னுடைய சிறப்பான ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த அர்ஜுன் ஆக்ஷன் கிங் என்றே அழைக்கப்பட்டு வருகிறார். தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள அவர் சேவகன், வேதம், ஏழுமலை மற்றும் பரசுராம் உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார்.

மீண்டும் இயக்கம்

ஒரு கட்டத்தில் ஹீரோவாக மட்டும் இல்லாமல் மற்ற நடிகர்களின் படங்களில் குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்துள்ளார். அப்படி அவர் நடித்த மங்காத்தா, இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்கள் அவருக்கு பாராட்டுகளைப் பெற்றுத்தந்தன. இந்நிலையில் தன் மகள் ஐஸ்வர்யாவை தெலுங்கு சினிமாவில் அறிமுகப்படுத்தி ஒரு படத்தை இயக்க உள்ளார் அர்ஜுன்.

Arjun directing a telugu movie starring his daughter

அந்த படத்தின் பூஜை சமீபத்தில் நடந்துள்ளது. இந்த பூஜையில் பவன் கல்யாண், பிரகாஷ் ராஜ் மற்றும் இசையமைப்பாளர் மரகதமணி ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். இது சம்மந்தமான புகைப்படங்களை அர்ஜுன் பகிர, அவை இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. இந்த படத்தில் ஐஸ்வர்யாவோடு விஷ்வாக் சென் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

ஐஸ்வர்யா ஏற்கனவே தமிழில் சில படங்களில் நடித்து கவனம் பெற்ற நடிகையாக உள்ளார். விஷால் நடித்த பட்டத்து யானை திரைப்படத்தில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய இணைப்புகள்

Arjun directing a telugu movie starring his daughter

People looking for online information on Aishwarya Arjun, Arjun will find this news story useful.