www.garudabazaar.com

அடேங்கப்பா.. நம்ம ஏ.ஆர்.ரஹ்மானை மீசையோட பாத்துருக்கீங்களா? சும்மா வேற வெல்ல இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் இருந்து சென்று, இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் அறியப்படும் மிகப் பிரபலமான இசை அமைப்பாளர் ‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்.

AR Rahman new moustache look மீசையுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

இசையில் ஒரு சகாப்தம் என்று சொல்லும் அளவுக்கு ஆஸ்கர் விருதுகள் வரை வென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது இந்திய மற்றும் தமிழ் படங்களுக்கு இசை அமைப்பதில் பிஸியாக இருக்கிறார். இதனிடையே ஏ.ஆர்.ரஹ்மானை மீசை இல்லாமல் பல புகைப்படங்களிலும் வீடியோக்களிலும் தோன்றுவதை பார்த்திருக்க கூடும். இந்த நிலையில்தான் ரஹ்மான் மீசையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

AR Rahman new moustache look மீசையுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

ஆம் ஏ.ஆர்.ரஹ்மான், ஒரு ஆப் மூலமாக மீசை வைத்து ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருக்கிறார். இந்த புகைப்படம்தான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை தம்முடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் எக்ஸ்போ 2020 துபாய் என கேப்ஷன் பதிவிட்டு இருக்கிறார்.

ஜூம் ஆப் லைவ் ஸ்டுடியோ ஏஐ என்கிற செயலி மூலம் இப்படியான ஒரு புகைப்படத்தை அவர் உருவாக்கியதாகவும் தம்முடைய பதிவில் அவர் குறிப்பிட்டிருக்கிறார். இந்த புகைப்படம் படு ட்ரெண்டிங்காக சென்று கொண்டிருக்கிறது.

AR Rahman new moustache look மீசையுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

இதனிடையே கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்து உருவாகும் ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். 2010-ஆம் ஆண்டு கவுதம் மேனன் - சிம்பு- ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி இணைந்துள்ள இந்த படத்துக்கு எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

இதேபோல், 'ஒத்த செருப்பு' படத்துக்குப் பிறகு தற்போது இயக்குநர் பார்த்திபன் முழுக்க முழுக்க ஒரே ஷாட்டில் இயக்கவுள்ள ‘இரவின் நிழல்’ படத்துக்கும் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பதை தமது ட்வீட் மூலம் ரஹ்மான்  ஏற்கனவே உறுதிப் படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடேங்கப்பா.. நம்ம ஏ.ஆர்.ரஹ்மானை மீசையோட பாத்துருக்கீங்களா? சும்மா வேற வெல்ல இருக்கு! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

AR Rahman new moustache look மீசையுடன் ஏ.ஆர்.ரஹ்மான்

People looking for online information on AR Rahman, Trending will find this news story useful.