வீட்டின் கேப்டனாக ஏண்டா வந்தோம் என மனதுக்குள் கண்டிப்பாக புலம்பி இருப்பார் சம்யுக்தா. அந்தளவுக்கு இந்த வாரம் வீட்டில் எக்கச்சக்க சண்டைகள். யார், யாருடன் சண்டை போடுகிறார்கள் என தெரியாத அளவுக்கு பயங்கர களேபரங்கள் உண்டாகி இருக்கின்றன. சுச்சி புண்ணியத்தில் அது நன்றாகவே கொளுந்துவிட்டு எரிகிறது.
குறிப்பாக ஆரி-சம்யுக்தா இடையிலான மோதல் நிற்காமல் நான்ஸ்டாப் பேருந்து போல சென்று கொண்டிருக்கிறது. இந்த பாலாஜி விட்டு கொடுக்கும் போதே யோசிச்சு இருக்கணும் என இன்னும் அவர் நொந்து கொள்ளக்கூடிய தருணங்கள் நிறைய வரலாம். இதில் நேற்று பாலாஜிக்கு ஆதரவாக அவர் பேசும்போது குறுக்கே ஆரி புகுற அவர்கள் இருவருக்கும் அங்கே ஒரு தனி சண்டை நடந்தது.
#Anitha is correct about #Sombyuktha , Her character changed a lot after escaping from the nominations 🤢🤢🤮#SamOruSombu #BiggBossTamil4
— 𝙈𝙪𝙠𝙚𝙨𝙝_𝙏𝙖𝙢𝙖𝙣𝙣𝙖𝙖𝙝_𝙎𝙪𝙧𝙞𝙮𝙖 🕊 (@Mukesh_Speakz) November 3, 2020
இதைப்பார்த்து சம்யுக்தா இப்படி சண்டை போடுவாங்களா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கிடையே அவர் நிறைய மாறி விட்டதாக அனிதா, ஆரியிடம் தனியே எடுத்து சொன்னார். குறிப்பாக கேப்டன் ஆனதும் அவரின் அணுகுமுறை முற்றிலும் மாறியிருப்பதாக தெரிவித்தார். இதைப்பார்த்த ரசிகர்கள் கரெக்ட்டா சொன்னீங்க என அவரை பாராட்டி வருகின்றனர்.