Angamaly Diaries நடிகர் மர்மமான முறையில் மரணம்?.. வீட்டில் இருந்து மீட்கப்பட்ட 'உடல்'.. அதிர்ச்சி பின்னணி
முகப்பு > சினிமா செய்திகள்லிஜோ ஜோஸ் பெலிசாரி இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ், அன்னா ராஜன், சரத் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து மலையாளத்தில் வெளியாகி இருந்த திரைப்படம் "அங்கமாலி டைரீஸ்".

Also Read | தனுஷ் நடிக்கும் 'ஆயிரத்தில் ஒருவன்-2'.. செல்வராகவன் கொடுத்த சூப்பர் அப்டேட்!
மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்த இந்த திரைப்படம், படத்தில் நடித்த பலரையும் வேற லெவலில் பிரபலமாக்கி இருந்தது.
இந்நிலையில், இந்த படத்தின் முன்னணி நாயகனாக நடித்திருந்த ஆண்டனி வர்கீஸ் பகிர்ந்த பேஸ்புக் பதிவு, ரசிகர்கள் பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது.
அங்கமாலி டைரீஸ் படத்தில் நடித்திருந்த சரத் சந்திரன் என்ற நடிகர், உயிரிழந்ததாக குறிப்பிட்டுள்ளார். 37 வயதாகும் சரத் சந்திரன், அங்கமாலி டைரீஸ் தவிர, ஒரு மெக்சிகன் அபாரதா, கூடே, சிஐஏ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர். அதே போல, நிறைய விளம்பர படங்களிலும் சரத் சந்திரன் நடித்துள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், கேரள மாநிலம் கொச்சி பகுதியில் அமைந்துள்ள கக்காட்டில் உள்ள தனது வீட்டில் உயிரிழந்த நிலையில், சரத் சந்திரன் மீட்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.
தனது பெற்றோர்கள் மற்றும் சகோதரனுடன் வாழ்ந்து வந்த சரத் சந்திரனின், அவரது அறையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது சரிவர தெரியவில்லை. மேலும், அவரது அறையில் சோதனை மேற்கொண்ட போது, கடிதம் ஒன்று சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மன அழுத்தம் உள்ளிட்டவற்றால் சமீப காலமாக நடிகர் சரத் சந்திரன் அவதிப்பட்டு வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மிக இளம் வயதிலேயே நடிகர் சரத் சந்திரன் உயிரிழந்த சம்பவம், கேரள திரை உலகில் கடும் அதிர்ச்சியையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
Also Read | VIDEO: 'வாரிசு' படம் இப்படி தான் இருக்கும்.. பிரபல நடிகர் கொடுத்த Exclusive அப்டேட்!