பாடகி வாணி ஜெயராம் மறைவு.. பூத உடலை வணங்கி அஞ்சலி செலுத்திய தமிழக ஆளுநர் ரவி..
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவுக்கு தமிழக ஆளுநர் ரவி நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது வீட்டில் தமது 78 ஆவது வயதில் வாணி ஜெயராம் காலமானார்.
இசை உலகில் தனக்கென ஒரு சாம்ராஜ்யத்தை நடத்திய வாணி ஜெயராமின் மறைவு, அவரது ரசிகர்கள் மற்றும் திரை பிரபலங்கள் பலரையும் கண்ணீரில் நனைய வைத்துள்ளது.
தமிழில் 1973 ஆம் ஆண்டு வெளியான "தாயும் சேயும்" என்ற திரைப்படத்தில் பின்னணி பாடகியாக பிரபலமானவர் வாணி ஜெயராம். மொத்தம் 19 மொழிகளில் சுமார் 10,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ள வாணி, தமிழில் மட்டும் சுமார் 1500 பாடல்கள் வரை பாடி உள்ளார். மல்லிகை என் மன்னன் மயங்கும், ஏழு ஸ்வரங்களில் எத்தனை ராகம் உள்ளிட்ட பாடல்கள் முக்கியமானவை.
வாணி ஜெயராமனுக்கு கடந்த குடியரசு தின விழாவின் போது பத்ம பூஷன் விருதும் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழக ஆளுநர் ரவி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். Haddows Road நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு கைக்கூப்பி வணங்கி அஞ்சலி செலுத்தினார். மேலும் குடும்ப உறுப்பினர்களிடம் துக்கம் விசாரித்தார்.