ET Others
www.garudabazaar.com

ஹாலிவுட்டுக்கு செல்லும் ஆலியா பட்! முதல் படமே Gal Gadot கூட... செம மாஸ் தான்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

RRR படத்திற்கு பின் இந்த கங்குபாய் கதியாவாடி படத்தில் ஆலியா பட் நடித்துள்ளார்.

Alia Bhatt will act opposite Gal Gadot and Jamie Dornan

சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் ஜெயந்திலால் கடா ஆகியோரால் தயாரிக்கப்பட்டு சஞ்சய் லீலா பன்சாலி இயக்கி உள்ளார். பயோகிராபி கிரைம் டிராமாவாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்த படம் ஹுசைன் ஜைதியின் "மும்பையின் மாஃபியா குயின்ஸ்" என்ற புத்தகத்தின் ஒரு அத்தியாயத்திலிருந்து தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

ஆலியா பட் நடித்த கங்குபாய் கத்தியவாடி திரைப்படம் பிப்ரவரி 25, வெள்ளிக்கிழமை அன்று திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இந்த படம் முதலில் 11 செப்டம்பர் 2020 அன்று திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டது, பின்னர் 30 ஜூலை 2021 அன்று வெளியிட திட்டமிடப்பட்டது.

அதன் பிறகு இந்தியாவில் கோவிட்-19 தொற்று நோய் காரணமாக கங்குபாய் கத்தியவாடி பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. ‘RRR’ திரைப்படம் மார்ச் 25-ம் தேதி உலகம் முழுவதும் தியேட்டர்களில் வெளியாகிறது.

Alia Bhatt will act opposite Gal Gadot and Jamie Dornan

கத்தியவாடியின் எளிய பெண்ணான கங்கா ஹர்ஜிவந்தஸ், காமாதிபுராவின் சிவப்பு விளக்குப் பகுதியில் மிகப்பெரிய டானாக  கங்குபாய் எப்படி மாறுகிறாள் என்பதே படத்தின் கதை. 'கங்குபாய் கோதேவாலி என்ற இளம்பெண்ணை விபச்சாரத்திற்கு விற்பது முதல் பின் அவள் எப்படி காமாதிபுராவில் உள்ள ஒரு விபச்சார விடுதியின் மேடமாக மாறுகிறாள் என்பது வரை' படம் பேசி உள்ளது.

Alia Bhatt will act opposite Gal Gadot and Jamie Dornan

இந்நிலையில் நடிகை ஆலியா பட் , டாம் ஹார்ப்பர் இயக்கத்தில் நெட்பிளிக்ஸ், ஸ்கை டான்ஸ் தயாரிக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். ஹால்  கடோட் (Gal Gadot) மற்றும் 'Fifty Shades Trilogy' நடிகர் ஜேமி டோர்னன் (Jamie Dornan) உடன் இணைந்து நடிக்க உள்ளார். ஏற்கனவே ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோன் ஆகியோர் ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளனர். இவ்வரிசையில் ஆலியாபட்டும் இணைந்துள்ளார்.

Alia Bhatt will act opposite Gal Gadot and Jamie Dornan

ஆலியா பட் நடிப்பில் அடுத்தடுத்து பிரம்மாஸ்திரா, டார்லிங்க்ஸ், ராக்கி அவுர் ராணி கி ப்ரேம் கஹானி உள்ளிட்ட பாலிவுட் திரைப்படங்கள் விரைவில் ரிலீஸாக உள்ளன. 

 

Tags : Alia Bhatt

தொடர்புடைய இணைப்புகள்

Alia Bhatt will act opposite Gal Gadot and Jamie Dornan

People looking for online information on Alia Bhatt will find this news story useful.