'முதல்நாள் ஸ்கூலுக்கு யாராவது சிரிச்சிட்டே போவாங்களா.. நான் போனேன்' - பிரபல ஹீரோயின் மெமரீஸ்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை யாமி கௌதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது முதல்நாள் பள்ளி அனுபவத்தை பகிர்ந்துள்ளார்

தமிழ் மற்றும் ஹிந்தி மொழி படங்களில் பிரபல ஹீரோயினாக வலம் வருபவர் யாமி கௌதம் . இவர் தமிழில் ராதாமோகன் இயக்கிய கௌரவம் படத்தில் அறிமுகமானார். இதையடுத்து ஜெய்யுடன் தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் எனும் படத்தில் நடித்தார். ஹிந்தியில் சூப்பர் ஹிட் அடித்த உரி படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் யாமி கௌதம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை பகிர்ந்துள்ளார். முதல்நாள் பள்ளிக்கூடத்துக்கு சென்ற புகைப்படத்தை பகிர்ந்துள்ள அவர், ''முதல்நாள் பள்ளி அனுபவம். அன்று என்ன நடந்தது என தெரியவில்லை, ஆனால் நான் மிகவும் ஆர்வமாக யூனிஃபார்ம் அனிந்து கொண்டு,, அம்மாவும் அப்பாவும் என்னை எங்கு கூட்டி செல்கிறார்கள் என்ற ஆவலோடு சென்றேனாம், இதே ஆர்வத்தோடு நான் எப்போது பள்ளிக்கு சென்றுள்ளேன்,அப்படிதான் என் பெற்றோர் சொல்கிறார்கள்'' என பதிவிட்டுள்ளார்.