4 வருஷத்துக்கு முன்னாடி ஷிவானி நாராயணன் எப்படி இருந்தார் பாருங்க.! - இது செம Change Over.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஷிவானி நாராயணன் 4 வருடத்திற்கு முன் எடுத்த போட்டோவை பகிர்ந்துள்ளார். 

நடிகை ஷிவானி நாராயணன் இளமை புகைப்படம் | actress shivani narayanan shares her pic took 4 years ago

சின்னத்திரை சீரியல்களில் கலக்கி வருபவர் ஷிவானி நாராயணன். விஜய் டிவியின் பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட தொடர்களில் நடித்து இவர் பிரபலமானார். இதையடுத்து இவர் தற்போது இரட்டை ரோஜா என்கிற சீரியலில் பிசியாக நடித்து வருகிறார். 

இந்நிலையில் ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளார். 2016-ஆம் ஆண்டு எடுத்த தனது போட்டோவையும், தற்போது உள்ள போட்டோவையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும், 'இதை எப்படி செய்தேன் என தெரியவில்லை, ஆனால் நான் செய்தேன். என்னால் முடிந்தால், கண்டிப்பாக உங்களாலும் முடியும்'' என அவர் பதிவிட்டுள்ளார். 

 

Entertainment sub editor