ET Others
www.garudabazaar.com

“என்ன பாத்துகிட்டதுக்கு நன்றி” … “நீங்கதான் என் strength” பூஜா பகிர்ந்த நெகிழ்ச்சி புகைப்படம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை பூஜா ஹெக்டே நடித்துள்ள ராதே ஷ்யாம் திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில் தன்னுடைய மேக்கப் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Actress pooja hedge thanked her team for making beauty

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, பிரபாஸ் இப்போது இந்தியாவில் கொண்டாடப்படும் நட்சத்திரங்களில் ஒருவராகிவிட்டார். சாஹோ மற்றும் பாகுபலி போன்ற அதிரடி படங்களில் நம் இதயங்களை கொள்ளையடித்தவர் அவரின் நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த படமான ராதே ஷ்யாமில் பூஜா ஹெக்டே அவருக்கு நிகரான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

விதியா காதலா?

முடிவில்லாத போரில் விதியும் காதலும் ஒன்றுக்கொன்று சண்டையிடுகின்றன. கணிப்புகளின்படி நடக்காத காதலில் விழும் ஆதித்யா என்ற ஜோதிடராக பிரபாஸ் நடித்துள்ளார். விதிக்கும் காதலுக்கும் இடையே நடக்கும் இந்தக் காவியப் போரில் யார் வெல்வார்கள்? இதற்கான பதிலை இந்த மார்ச்சில் வெள்ளித்திரையில் சொல்வார் ராதே ஷ்யாம். ஜஸ்டின் பிரபாகரனின் பாடல்களுடன், தமன் பின்னணி இசையமைத்து, மதன் கார்க்கியின் வரிகள் மற்றும் வசனங்களுடன், ராதே ஷியாம் ஒரு காட்சிக் கவிதையாக வந்திருக்கிறார் என்கிறார் இயக்குனர் ராதா கிருஷ்ணா. இப்படம் மார்ச் 11ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.

Actress pooja hedge thanked her team for making beauty

அழகுப்பதுமை பூஜா ஹெக்டே

அவரின் காதலியாக அழகுப் பதுமையாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். அலா வைகுந்தபுரம்லூ உள்ளிட்ட படங்களின் வெற்றிக்குப் பிறகு பூஜா ஹெக்டே தென்னிந்தியாவில் கவனிக்கப்பட்ட நடிகையான அவர், இந்த படத்தின் மூலம் இந்தியா முழுவதும் கவனத்தைப் பெற்றுள்ளார். ராதே ஷ்யாம் திரைப்படம் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ள நிலையில் ஒவ்வொரு பிரேமிலும் அழகுப்பதுமையாக பூஜா ஹெக்டேவைக் காட்டியுள்ளனர் படக்குழுவினர். டிரைலர் மற்றும் போஸ்டர்களில் அவரின் லுக் ரசிகர்களைக் கவரும் விதமாக அமைந்திருந்தன.

Actress pooja hedge thanked her team for making beauty

தனது குழுவினருக்கு உருக்கமான நன்றி

இந்நிலையில் தன்னை அழகாகக் காட்ட ஒவ்வொரு நாளும் உழைத்த தனது மேக்கப் குழுவினருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பூஜா. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழுவினரோடு இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து ‘எனது அழகான குழுவிற்கு (இந்த புகைப்படத்தில் உள்ளவர்கள் மற்றும் இல்லாதவர்களையும் சேர்த்து). ராதே ஷ்யாம் திரைப்படம் ரிலிஸுக்கு முதல் நாளில் உங்களுக்கு நன்றி கூற விரும்புகிறேன். தினமும் படப்பிடிப்புத் தளத்தில் நேர்மறை ஆற்றலை செட்டில் கொண்டு வந்ததற்கு. இந்த சவாலான படத்தின் ஒவ்வொரு நாளும் என்னை ஆதரித்ததற்காக, நான் சோர்வடையும் நாட்களில் தொடர்ந்து எனக்கு பலம் அளித்து வந்தீர்கள். நீங்கள் என் பலமாக இருந்தீர்கள், என் சாட்சியாக இருந்தீர்கள், என் சிரிப்பிற்கும், என் சக்திக்கும் காரணம். என்னைக் கவனித்துக்கொண்டதற்கு நன்றி. படத்தின் ரிசல்ட் எதுவாக இருந்தாலும், நீங்கள் எனக்கு செய்த அனைத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்பதை உங்களுக்கு கூற விரும்புகிறேன்’ எனக் கூறியுள்ளார்.

Actress pooja hedge thanked her team for making beauty

தொடர்புடைய இணைப்புகள்

Actress pooja hedge thanked her team for making beauty

People looking for online information on Pooja Hegde, Prabhas, Radhe Shyam will find this news story useful.